95. உழிஞை
முடிமிசை யுழிஞை சூடி யொன்னார்
கொடிநுடங் காரெயில் கொளக்கரு தின்று.

(இ - ள்.) தம் முடிமேலே உழிஞைமாலையை அணிந்து பகைவர் கொடியசையும் நிறைந்த குறும்பினைக் கைப்பற்ற நினைத்தது எ-று.

(வ - று.)
உழிஞை முடிபுனைந் தொன்னாப்போர் மன்னர்
விழுமதில் வெல்களிறு பாயக்-கழி1மகிழ்
வெய்தாரு மெய்தி யிசைநுவலுஞ் சீர்த்தியனே்
கொய்தார மார்பினெங் கோ.

(இ - ள்.) உழிஞைமாலையை முடிமேலே சூடிப் பொருந்தாத போரினைச் செய்யும் 2வேந்தர் சீரிய புரிசையை வெல்லும் யானை குத்த மிக்க களிப்புமேவாத பெரியோரும் மகிழ்ச்சியைமேவிக் கீர்த்திகூறும் பெரும் புகழினையுடையவன்,மட்டஞ் செய்த மாலையாற் சிறந்த மார்பினையுடைய எம் வேந்து எ-று.

அம்மென்றது, சாரியை.

(1)

1. மகிழ்பு.
2. வேந்தர்தஞ்சீரிய.