கலந்தடையார் மதில்கருதி வலந்தருவா ணாட்கொண்டன்று. (இ - ள்.) கூடிச் சேராதார்தம் அரணினைக் கோடலை நினைந்து வெற்றிகொள்ளும் வாளைப் புறவீடுவிட்டது எ-று. (வ - று.) 1வாணாட்கொளலும் வழிமொழிந்து வந்தடையாப் பேணார் பிறைதொடும் பேமதிற்-பூணார் அணிகொள் வனமுலையா ராடரங்க மேறிப் பிணிகொள்பே யாடும் பெயர்த்து. (இ - ள்.) வாளினைப் புறவீடுவிட்டானாக , தாழ்வு சொல்லிவந்து சேராத பகைவருடைய மதியைத் தீண்டும் அச்சமுறுத்தும் மதிலிடத்து ஆபரணம் நிறைந்த அலங்காரங்கொண்ட அழகிய கொங்கையினையுடையார் நிருத்த மண்டபத்தேயேறிக் கைகோத்த பேயாடும், பல கூத்தினையும் மாறி. திணைதோறும்வாணாட்கொள் குடைநாட்கோள் வேறுபாடுடைய. (3)
1. தொல். புறத். சூ. 11, இளம். மேற். |