அ - அழகு 118, 131
   அ - ஒரு சாரியை 127
   அகடு - வயிறு 87, 96
   அகத்தியமுனிவர் தேவர்கள் வேண்டப் பொதியியலில் இருந்தது 2
   அகத்தியமுனிவர் மாணாக்கர் பன்னிருவர் 2
   அகநாடு - உள்நாடு 21
   அகம் - அந்தணரில்லம் 23
   அகலம் - மார்பு 44, 83, 117, 140, 142
   அகலிடம் - அகன்ற பூமி 124, 131
   அகவ - பாட 25
   அகழ்கடல் - அகழ்ந்த கடல் 119
   அகற்றும் - பெருக்கும் 113
   அகனகர் 75
   அகையழல் - கொழுந்து விட்டெரியும் நெருப்பு 120
   அங்கயுள் நெல்லி 18
   அச்சுறீஇயன்று - அச்சமுறுத்தியது 38
   அசேதனம் 122
   அசை - தூக்குதல் 68
   அசைஇ - இளைப்பாறி 7
   அசைஇய - வைத்த 7
   அசைகள் - (அரோ,ஆல்,ஒடு) 7, 13, 24, 26, 108, 124, 146
   அசைதல் - வருந்துதல் 107
   அசைநிலை 2, 5, 7, 14, 21, 26, 28, 65, 108, 124, 146
   அசையா - வருந்தாத 107
   அஞ்சல் - அஞ்சாதே கொள்(அஞ்சற்க) 157
   அஞர் - துன்பம் 5, 14, 18
   அட்டிமதுரம் - அதிமதுரம் 158
   அட்டு - கொன்று 10
   அடக்கருந்தானை - விலக்குதற்கரிய சேனை 63
   அடகு - இலைக்கறி 118, 129
   அடர் - தகடு 94
   அடர் - பொற்றகடு 94
   அடர்ந்து - நெருங்கி 5
   அடல் - கொல்லல் 82
   அடல் - வெற்றி 81
   அடி - செருப்பு 4
   அடிப்பட - வழிப்பட 59
   அடிப்படுத்தல் - அடக்கல் 90
   அடியிரட்டித்து - இட்ட அடியின் மேலே அடியிட்டு 15
   அடியுறை 155
   அடுகம் - அடுவேம் 56
   அடுகளம் - கொல்லும் களரி 91
   அடுதல் - வருந்துதல் 143
   அடும்புகழ்பாடல் - பிரதாபத்தைப் பாடுதல் 116
   அடை - இலை 157
   அடைகுறுவார் - கிட்டுதலைப்பெறுவார் 25
   அடையாதார் - பொருந்தாதார் 49
   அடையார் - பகைவர் 3
   அடையாளப்பூ 111
   அண்ணல் - தலைமை 63, 94
   அணக்கு - வருந்துதல் 98
   அணங்க - ஆர்ப்ப 114
   அணங்காடல் 76
   அணங்கிய - பட்ட 72
   அணங்கிய - வருத்திய 34
   அணங்கு - தெய்வம் 22
   அணங்கு - பேய் 76
   அணங்கு - வருத்துதல் 18
   அணங்கும் - வருத்தும் 86, 114
   அணல் - கபோலம் 8
   அணல் - பசுவின் அலைதாடி 8
   அணி - அலங்காரம் 8, 134
   அணி - அழகு 8, 134
   அணியிட்டு - கடைக்கணித்து 31
   அணியெழு - நிரைத்த கணையம் 52
   அதர் - வழி 12
   அதிர்தல் - முழங்குதல் 48
   அந்தக்கரணம் 87
   அந்தகாரம் - இருள் 79
   அந்தணர்க்குக் கேள்வியும் வேள்வியும் இன்றியமையாதன 77
   அந்தணர்க்கு நெருப்பு 77
   அந்தணர்க்குப் பசு கொடுத்தல் 94, 95
   அந்தணர் தூதுசென்று அரசரை இணங்குவித்தல் 81
   அந்தணரிருப்பிடம் 23
   அந்தம் - முடிவு 22
   அந்தரம் - ஆகாயம் 52
   அந்நரம்பு - அழகிய நரம்பு 161
   அப்பு - நீர் 143
   அப்புவிழவு - நீர்விளையாட்டு 143
   அபியோகம் - முறையீடு 81
   அம் - சாரியை 47
   அம்பலம் - மன்று 22, 148
   அம்பற்பெண்டிர் - புறங்கூறும் பெண்டிர் 139
   அம்பு 7
   அம்புக்கு மகளிர்கண் 41
   அம்புமழை 34
   அம்மென்கிளவி 132
   அமர்தல் - விரும்புதல் 20, 109
   அமர்ந்தன்று - விரும்பியது 4
   அமர்ந்தான் - மேற்கொண்டான் 67
   அமரர் - கடவுளர் 109
   அமலை - கூத்து 69
   அமலை - திரட்சி 69
   அமளி - அணை 97
   அமளி - ஆசனம் 97
   அமை - மூங்கில் 52
   அமைத்த - மதித்த 159
   அமையாக் காதல் - ஆராத அன்பு 109
   அயர்தும் - விரும்புவேம் 15, 60
   அயர்ந்து - மனந்து 124
   அயர்வு - மயக்கம் 137
   அயராநின்றார் - அழியாநின்றவர் 22
   அயில் - வேல் 25
   அயில்வாள் - கூரியகத்தி 28
   அயில்வேல் - கூரியவேல் 10
   அரங்கம் - மண்டபம் 48
   அரசர் அந்தணர்க்குக் கோதானம் செய்தல் 95
   அரசர் ஆறிலொரு கடமை வாங்குதல் 84
   அரசர் இறந்தபின் சுவர்க்கமடைதல் 84
   அரசர் இன்னாரின்னார்க்கு வழி நிற்க வேண்டுமென்றல் 102
   அரசர் உழைத்தவீரர்க்கு மருதநிலமும் வரிசையுங் கொடுத்தல் 18
   அரசர்க்குரிய ஐந்தொழில் 57
   அரசர் தம் சேனைக்கு விருது,நாடு, சிறந்த பொருள்கள், விளைநிலம், யானை, குதிரை முதலியன கொடுத்தல் 61
   அரசர் தம் பகைவருடைய அரண்களை இடித்துக் கழுதையேராலுழுது கவடியையும் குடைவேலையும் விதைத்தல் 57
   அரசர் தாம் வென்றநாடு தம்வசமாவதற்கு நெடுநாள் அங்கிருத்தல் 59
   அரசர் திரையளந்து விட்டுச் சக்கரவர்த்தியைக் காணக் காத்திருத்தல் 93
   அரசர் நாடுகாத்தற் றெழிலிற் சோம்புதல் கூடாது 84
   அரசர் நீக்குதற்குரிய எழுசெயல்கள் 104
   அரசர் பகைவர் நகரை ஒருவரும் வெளியே போகாதபடி வளைத்தல் 6
   அரசர் பகைவரை வென்று தம் ஆயுதத்தை உயர்த்தல் 23, 76, 93
   அரசர் பாதுகாத்தற்குரிய ஆறு செயல்கள் 104
   அரசர்பாற் சென்ற கிணைவர் விடியற் காலத்திற் கிணைக்கொட்டியானை வாழ்கவென்று வாழ்த்தல் 96
   அரசர் புத்திரசனன காலத்திற் படையெடாமை 99
   அரசர் புலவரை அனுப்புகையில் பின் நடந்து வருதல் 99
   அரசர் போர்க்களத்தில் தமது அடையாளப் பூவை அணிதல் 111
   அரசர் போர்க்களத்தில் பாணர்க்கு யானை கொடுத்தல் 97
   அரசர் மகப்பேறுற்றபொழுது யானை பொன் முதலியன அளித்தல் 98
   அரசர் மனம்வெற்றியையே நினைதல் 14
   அரசர் மனையிற் காலையில் முரசம் முழங்கல் 56, 95
   அரசர் விடியற்காலத்தில் மங்கலங்களை அனுபவித்தல் 93
   அரசர் வெண்கொற்றக் குடைக்கு நிறைமதி 17
   அரசர் வெண்கொற்றக் குடைக்கு முத்துமாலையணிதல் 33
   அரசருக்கு உயிர்களைக் காத்தலே சிறந்த செல்வம் 62
   அரசருக்குச் சூரியன் 64
   அரசருக்கு நீதி நிலத்தைத் தருமென்பது 103
   அரசருக்குப் பகைவர் தேசம் நடுங்குதல் 99
   அரசருக்கு வீரமே மதில் 59
   அரணம் - எயில் 59
   அரதனம் 26
   அரவும் உடும்பும்போல் வீரர் மதிலேணியில் எறுதல் 54
   அரற்றின்று - வாய்விட்டுப் புலம்பியது 137
   அரண் - இறைவன் 12
   அரி - அழகு 96
   அரி - கருவரி செவ்வரி 109
   அரிகொண்ட கண் 109
   அரிதல் - அறுத்தல் 43
   அரிமா - சிங்கம் 69, 71
   அரிமான் அமளி - சிங்காதனம் 97
   அரில் - பிணக்கம் 34, 117
   அரில் - பிணக்கு 43
   அருஞ்சுரம் - அரியவழி 7
   அரும்பிற்குமுண்டோ அலரது நாற்றம் 153
   அரும்புதல் - தோற்றுதல் 135
   அருவி - உருவமில்லாதது 109
   அருவி - நீரின் ஒழுக்கம் 107
   அருவி - மலையருவி 132
   அருவி முரசுபோல முழங்கல் 142
   அருளிய - அருள 92
   அருளுமது - அருளுவது 129
   அரோ : அசை 51, 65, 124
   அல் - இரவு 138
   அல் - கனவு 109
   அல்லாந்து - அலம்வந்து 124
   அல்லியந்தார் 98
   அலங்குமல் - விளங்குதல் 63
   அலந்து - நொந்து 22, 118
   அலம் வந்து 124
   அலம்வர - அசைந்துவர 114
   அலம்வர - சுழல 80
   அலமருதல் - சுழலுதல் 101
   அலமரும் - சுழலும் 143
   அலர் - பழி 140
   அலர்தல் - பணைத்தல் 119
   அலர்தூற்றல் - பழிகூறல் 134
   அலற - கலங்க 3
   அலைதாடி(பசுவின் உறுப்பு) 8
   அவ்வளை - அழகியவளை 118
   அவ்வாய் - அழகியவாய் 131
   அவண் - அவ்விடம் 119
   அவதரித்தல் - தங்குதல் 18, 26, 84, 96, 118
   அவலம் - துயரம் 149
   அவாம் - ஆசைப்படும் 154
   அவாய் - ஆசைப்பட்டு 137
   அவி - அவிசு 95
   அவிதல் - இறத்தல் 120
   அவிந்த - பட்ட 69
   அவிந்தன்று - ஒழிந்தது 88
   அவிந்தார் - கொட்டார் 60
   அவிப்பலி - உயிர்ப்பலி 86
   அவியாள் - அணைக்கமாட்டாள் 132
   அவியாள்- ஆற்றாள் 132
   அவிர்தல் - விளங்குதல் 32
   அவிர்ந்து 124
   அவிழ்தல் - ஒழுகல் 135
   அவிழ்தல் - மலர்தல் 27
   அவைமாந்தர் - அவைக்களத்துச் சான்றோர் 81
   அவைமாந்தர் - அவையத்தார்க்குரிய எண்குணம் 82, 84
   அவையத்தும் - அரசவையிடத்தும் 94
   அழகம்(அளகம்) - பனிச்சை (எதுகை) 161
   அழகு பீர்க்கம் பூப்போலப் பசத்தல் 155
   அழல்விழியா - அழலாக நோக்கி 85
   அழலவிர்பைங்கண் அரிமான் 97
   அழனடப்ப - நெருப்புச் செல்ல 6
   அழித்துச் சொல்லல் - மறுத்துச்சொல்லல் 30
   அழிபடரெவ்வம் - மிக்கு நடக்கும் விதனம் 132
   அழிபடை - கெட்டசேனை 45
   அழிபு - அழிதல் 23
   அழிபு - கேடு 30, 63
   அழிபு - தோல்வி 81
   அழிபு - நொந்து 39
   அழுங்கல் - ஆரவாரித்தல் 13
   அழுங்கல் - சத்தித்தல் 13
   அழுங்கின்று - ஒழிந்தது 148
   அழுவம் - காடு 121
   அழுவம் - நடு 74, 112
   அழுவம் - யுத்தம் 83
   அள்ளகடு - செறிந்தவயிறு 96
   அளகம் - கூந்தல் வகையுள் ஒன்று 103, 160, 161
   அளகம் - பனிச்சை 103, 160, 161
   அளந்த திறையார் - இட்ட திறைதினையுடையார் 92
   அளறு - சேறு 54
   அளி - அருள் 137
   அளி - இரக்கம் 11
   அளி - கருணை 79
   அளி - தண்ணளி 89
   அளித்தல் - ஒத்தல் 18
   அளித்து - அளிக்கத்தக்கது 99
   அற்று - அற்றறுதிப்பட்டு 155
   அற - கெட 43
   அறந்தருஞ் செங்கோல் - தருமத் தினையுண்டாக்குஞ்செங்கோல் 98
   அறந்தெரிகோலான் - தருமத்தை ஆராயும் செங்கோலான் 102
   அறம்பொருளின்பமே உலகியற் பொருள் 123
   அறிவயர்ந்து - உணர்ச்சிமறந்து 124
   அறிவன் - புலமை மிக்கவன் 104
   அறை - ஒலி 106
   அறை - கற்பாறை 142
   அறைகூவுதல் - போர்செய்தற் கழைத்தல் 34
   அறைதல் - ஒலித்தல் 106
   அறைய - சொல்ல 58
   அன்னப்பறவை 89
   அன்னா - அன்னையே 121
   அனுகரண ஓசை 81
   அனுகரணசத்தம் 125, 127
   அனுகரணத்தினையுடைய கீர்த்தி 127
   அனுயோகம் - வினா 81
   அனைய - அத்தன்மையவாகிய 74