இகல் - மாறுபாடு 3, 56, 63, 73, 95, 98, 112
   இகல் - வலி 37
   இகலின் - மாறுபடின் 62
   இங்குலிகம் - சாதிலிங்கம் 15
   இசை - புகழ் 81
   இஞ்சி - மதில் 54
   இட்டற்று - இட்டதன்மைத்து 3
   இட்டுக்கொடுத்தல் - ஏற்றிக்கொடுத்தல் 10
   இட்டு மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வருதல் 35, 39, 57
   இட்டுரைத்தல் - சிறப்பித்துச் சொல்லல் 35
   இடங்கணிப்பொறி - மதிலின் மேலுள்ள ஒருவகைப்பொறி 54
   இடங்கழிமால் - இராக வேகத்தை யுண்டாக்கும் மயக்கம் 141
   இடந்த - பிளந்த 39
   இடந்து - பெயர்த்து 52
   இடபம் 20
   இடம்படுதல் - அகலுதல் 124
   இடர் - மிடி 87
   இடர் - வருத்தம் 137
   இடர் - வறுமை 75
   இடர் எட்டு 96
   இடவழுவமைதி 64
   இடிமுரசம் - இடிபோல் முழங்கு முரசம் 94
   இடுதல் - பண்ணுதல் 54
   இடை - இடையீடு 128
   இடைக்குறை 52
   இடைமணி - செறிந்தமணி 163
   இடையாடின்று - நடந்தது 149
   இணர் - கொத்து 112, 131
   இணர் - தொத்து 144
   இணைந்த - தம்மில் இணையொத்த 126
   இணைந்த - இணைவளைகளையுடைய தெய்வமகளிர் 45
   இதழ் - இமை 131
   இதழி - கொன்றை 105
   இந்திரதனு - வானவில் 101
   இந்திரன் 97
   இமிழ்தல் - ஆர்த்தல் 9
   இமைத்தல் - விளங்கல் 74
   இமைத்தல் - விழித்தல் 66
   இமையோர் - தேவர் 106
   இயக்கல் - நடத்தல் 88
   இயக்கி - செலுத்தி 156
   இயக்கு - போக்கு (போதல்) 69
   இயங்கரணம் - திரிபுரம் 50
   இயங்காவிருள் - ஒருவரும் நடக்கத் தகாத இருள் 108
   இயம் - வாத்தியம் 14
   இயம்புதல் - ஒலித்தல் 27, 56
   இயம்புதல் - இமயன் உயிர்களைக் கைக்கொள்ளுதல் 63
   இயம்புதல் - இமயன் கொலையில் ஆராமையுடையவன் 36
   இயம்புதல் - இமயன் வாயிலே போன உயிரை மீட்டல் 73
   இயம்புதல் - இயமனைப்போலக் கோபித்தல் 14
   இயல் - தன்மை 50
   இயல்பு - பண்பு 39
   இயலுதல் - நடத்தல் 131, 151
   இயவர் - வாச்சியக்காரர் 29
   இயவர் - இயன்மொழிவாழ்த்து 91
   இயைந்து - கூடி 116
   இர - இரா 125
   இரக்கம் - விதனம் 133
   இரங்கல் - அதிர்தல் 24
   இரங்கல் - நெகிழ்தல் 21
   இரங்கல் - முழங்கல் 21
   இரங்கல் - வருந்துதல் 117
   இரட்டி - கொட்டி 16
   இரட்டித்து 16
   இரண்டாவதும் - மறுபடியும் 136
   இரண்டு - காரியாகாரியம் 104
   இரண்டு - புண்ணியபாவம் 104
   இரத்தவெள்ளம் தேர்க்காலைத் தொடர்ந்துசெல்லல் 65
   இரப்பல் - வேண்டிக் கொள்வேன் 140
   இரப்பாளன் - யாசகன் 99
   இரிந்தோட - கெட்டோட 84
   இரிய - இருத்திய 22
   இரிய - கெட 16, 95
   இருங்கண் - பெரிய இடம் 106
   இருடிகளில் வரன் 2
   இருண்மாலை 5
   இரும்புலி - பெரிய புலியனையான் 28
   இருவி - தினையரிதாள் 34
   இருள் - மயக்கம் 106
   இருள் - மனமயக்கம் 124
   இருளில் மின்னொளியால் வழிகண்டு செல்லுதல் 142
   இல் - கோயில் 116
   இலங்கிழை - விட்டுவிளங்கும் ஆபரணம் 147
   இலாஞ்சனை - அடையாளம் 34
   இலாபம் 157
   இலைக்கறி 129
   இலைத்தொழில்களாற்சிறந்த வேல் 3
   இலைப்பொலிதார் 37
   இலைபுனைகண்ணி 5
   இலைமாலை 37, 64
   இலைவேல் - இலைத்தொழில்களாற் சிறந்தவேல் 3
   இவர்தல் - பரத்தல் 130
   இவர்தல் - வேட்டல் 108
   இழுக்கு - அவலம் 135
   இழுது - நெய் 62
   இழுமென்சீர்த்தி 127
   இளமதி - பிறை 107, 140
   இளியென்னும் இசை - பஞ்சமசுரம் 9
   இளிவரவு - தாழ்வு 124
   இளை - காவற்காடு 43, 48
   இளையர் - வீரர் 112
   இற்பரத்தை 153, 154
   இறகு உளரும் - சிறகடிக்கொள்ளும் 97
   இறந்து - நீங்கி 72
   இறப்ப - மிகவும் 133
   இறப்ப - இறுகப்பொதிதல் 224
   இறுங்கு - சோளம் 157
   இறுத்த - விட்ட 29
   இறுத்தல் - கொடுத்தல் 118
   இறுவரை - பெரியமலை 69
   இறை - அரசன் 129
   இறை - தங்குதல் 92
   இறை - முன்கை 136, 140, 143
   இறைக்கொளீஇ - கையிலேகொள்ளச்செய்து 82
   இறைஞ்சி - தாழ்ந்து 125
   இறைவர் - உபகாரிகள் 91
   இறைவன் - சிவபெருமான் 109
   இறைவன் இருளில் நடனமாடியது 109
   இறைவன் இளம்பிறையைச் சடையிலணிந்தது 107
   இறைவன் உழிஞைமாலை சூடித்திரிபுரத்தை எரித்தது 50
   இறைவன்காப்ப நீ வாழ்கவென்றல் 105
   இறைவன் சூலத்தையேத்தி ஆடியது 106
   இறைவன் திருமிடியிற் கங்கையை யணிந்தது 109
   இறைவன் நாவிற் கலைமகளிருத்தல் 109
   இறைவன் பாம்பை மாலையாக அணிந்தது 107
   இறைவன் மயானத்திற் சாம்பல் அரங்கத்தில் நடித்தது 107
   இன்பம் 123
   இன்று - இன்றி 1, 2
   இன்றொடு நாளை - இன்றாதல் நாளையாதல் 124
   இன்றொடை - இனியகோவை 100
   இன்றொடை நல்லிசையாழ் 100
   இன்னம் - இத்தன்மையை யுடையேம் 22
   இன்னன் - இத்தன்மையார் 25
   இன்னன் - இத்தன்மையன் 113
   இன்னாதிரங்கி - வெறுத்து வருந்தி 140
   இன்னும் - இன்னமும் 72
   இனத்தான் - இனங்கள் தோறும் 111
   இனவளையார் - தம்மிற்றாமொத்த வளையினையுடையார் 106
   இனி - இப்பொழுது 110
   இனி - மேல் 74
   இனைதல் - வருந்துதல் 118
   இனைய - இத்தன்மையவாயின 74