உகம் - யுகம் | 19 |
உகளுதல் - பாய்தல் | 83 |
உகாது | 122 |
உகாந்தநெருப்பு | 6, 20 |
உகாந்தவெள்ளத்தினின்றும் உலகுதோன்றல் | 19 |
உகுதல் - இறத்தல் | 113 |
உகுதல் - வீழ்தல் | 15 |
உகும் - படும் | 113 |
உச்சநிலை | 26 |
உச்சியான் | 109 |
உட்குவர - அஞ்ச | 14 |
உட்கொண்டன்று - உள்ளத்திலே கைக்கொண்டது | 131 |
உட்கோள் - உட்கொள்கை | 132 |
உடக்கரிக்கை - (தோள்) தட்டுகை | 157 |
உடல் - மாறுபாடு | 74 |
உடலவும் - வெகுளவும் | 53 |
உடற்றும் - வருத்தும் | 80 |
உடன் - ஒக்க | 120, 160 |
உடன்கட்டையேறுதல் | 72 |
உடன்று - கோபித்து | 45 |
உடும்பு | 54 |
உடையான்றொழிலை உடைமையின் மேல் ஏற்றல் | 56 |
உடையும் - மலரும் | 140 |
உண்கண் - மையுண்டகண் | 128 |
உண்டாட்டு - மதுவையுண்டுகளித்தாடுதல் | 9 |
உண்ணாவரகு - கவடி | 57 |
உணங்குதல் - உலர்தல் | 16, 34 |
உணவு எட்டு | 157 |
உணிய - உண்பான் வேண்டி | 44 |
உணிய - தின்னவேண்டி | 7 |
உதிர்தல் - விழுதல் | 48 |
உதிரந்திக்கு அந்திவானம் | 35 |
உதைத்த (வில்லுதைத்த) - உமிழ்ந்த | 70 |
உபகண்டம் - குதிரை நடைகளுள் ஒன்று | 160 |
உம்பர்நாள் - மேனாள் | 45 |
உம்பர்நாள் - முன்னாள் | 45 |
உம்மை சிறப்புப்பொருளில் வருதல் | 20 |
உம்மையைவிரித்தல் | 3 |
உமை | 107 |
உய்குவன் - பிழைப்பேன் | 138 |
உய்த்தன்று - கொடுத்தது | 23 |
உய்த்தன்று - செலுத்திற்று | 8 |
உய்த்திட்டார் - செலுத்தியழுத்தினார் | 115 |
உய்ந்தொழிவார் - பிழைத்திருப்பார் | 6 |
உய்யாமை - ஒழியாமை | 57 |
உய்யாமை - செலுத்தாமை | 45 |
உயங்கல் - வருந்தல் | 36, 148, 150 |
உயப்போகல் - பிழைத்துப்போகை | 125 |
உயரி - உயர்த்து | 80 |
உயரி - எடுத்து | 21 |
உயல் - பிழைத்தல் | 135, 149, 151 |
உரம் - வலி | 8 |
உரவுநீர் - உலாவும்நீர் | 107 |
உரவெரி - உலாவும் எரி | 117 |
உரவொலி - வலிய ஆரவாரம் | 133 |
உரவோர் - வலியோர் | 6 |
உரிஞ்சுதல் - தவழ்தல் | 56 |
உரித்தாக - சேமமாக வேண்டி | 140 |
உரு - அச்சம் | 137 |
உருக - நெகிழ | 106 |
உருக - வருந்த | 135 |
உருகுதல் - கரைதல் | 143 |
உருகெழுகங்குல் - அஞ்சுதல் பொருந்திய இரவு | 137 |
உருத்து - கோபித்து | 20 |
உருப்பு - வெப்பம் | 116 |
உருமேறு | 58 |
உருவகவணி | 75 |
உருவம் - அழகு | 150 |
உருவம் - திருமேனி | 90 |
உருவி | 109 |
உரை - கீர்த்தி | 83 |
உரைத்தன்று - சொல்லியது | 5 |
உரைப்பு - சொல்லல் | 159 |
உரைமாலை - கீர்த்தித்தெரியல் | 83 |
உலக்கல் | 134 |
உலகியல்பொருள் - உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம் பொருளின்பங்கள் | 123 |
உலகு - உயர்ந்தோர் | 57 |
உலத்தல் - இறத்தல் | 118 |
உலந்தன - கெட்டன | 21 |
உலாம் - பரந்த | 27 |
உலாய் - இயங்கி | 80 |
உலாய் - நிலைபெயர்ந்து | 63 |
உலைவு - கேடு | 129 |
உவலை - தழை | 80 |
உவா - பௌர்ணிமை | 86 |
உழக்குதல் - துகைத்தல் | 17, 25 |
உழப்ப - பழக | 148 |
உழப்பு - முயற்சி | 32 |
உழலல் - சுழலல் | 123 |
உழலை - கணையமரம் | 158 |
உழிஞைமாலை | 48, 50 |
உழிஞையார் | 51 |
உழை - பக்கம் | 127 |
உழையீர் - பக்கத்தீர் | 101 |
உள்ளி - நினைந்து | 150 |
உள-உள்ள - கருத | 115 |
உளப்பட | 2 |
உளம் - மார்பு | 67 |
உளமை - உண்மை | 125 |
உளர்செரு - எடுப்பும் சாய்ப்புமான சண்டை | 14 |
உளர்ந்தார் - அசைந்தார் | 13 |
உளர - அசைப்ப | 126 |
உளரும் - அடிக்கொள்ளும் | 97 |
உளை - தலையாட்டம் | 24, 108, 126, 160 |
உளைத்தவர் - வெறுத்தவர் | 154 |
உற - மிக | 10 |
உறழ்தல் - மாறுபடுதல் | 79 |
உறழ்வு - ஒப்பு | 36 |
உறுபழி - மிக்கபழி | 135 |
உறுபுகழ் - மிகுபுகழ் | 112 |
உறும் - உறுதியுடைத்து | 18 |
உறுவரை - பெரியமலை | 144 |
உறை - கூடு | 84 |
உறை - துளி | 143 |
உறை - மழை | 86 |
உறை - மழைத்துளி | 79 |
உன்ன மரத்தில் நிமித்தம் பார்த்தல் | 112 |
உன்னமரம் : இதனை இலவமரமென்பர் மலைநாட்டார் | 112 |