எஃகம் - வேல் | 16, 32 |
எஃகு - வாள் | 28 |
எஃகு - வேல் | 22 |
எகரம் எஞ்சாமைப் பொருளில் வருதல் | 60 |
எஞ்சுதல் - ஒழிதல் | 102 |
எட்டுக் குணங்கள் | 82 |
எடுத்துரைத்தன்று - உயர்த்துச் சொல்லியது | 17, 77, 91 |
எடுத்து விடுதல் - சேனையுடன் பகைவர் நகரைச் சூழ்ந்து தங்கல் | 21, 30 |
எண் - எள் | 1 |
எண்ணல் - விசாரித்தல் | 119 |
எண்ணாதே கொள் | 105 |
எண்ணார் - பகைவர் | 17, 98 |
எதிர்கொண்டு - ஏற்றுக்கொண்டு | 78, 102 |
எதிர்ச் சிவல் | 159 |
எதிர்தல் - ஏற்றுக்கொள்ளல் | 60 |
எதிர்ந்தன்று - ஏற்றிருந்தது | 141 |
எதிராது - ஏற்றுக் கொள்ளாது | 60 |
எதிரிய - ஏற்றுக்கொள்ள | 35 |
எதிரிய - பொருந்திய | 35 |
எந்தை - என்னுடைய சாமி | 118 |
எய் - முள்ளம்பன்றி | 83 |
எய்த்தல் - இளைத்தல் | 128 |
எய்துதல் - பொருந்துதல் | 133 |
எய்துப - அடைவார் | 1 |
எய்ப்பன்றி | 83 |
எயிற்றி - மறத்தி | 8 |
எயிற்றியர் - வேட்டுவிச்சியர் | 8 |
எயிற்றுப்படை - (யானை) மருப்பாகிய ஆயுதம் | 52 |
எயிறு - பல் | 133, 142 |
எரிந்திலங்கு சடை - அவிர்ந்து விளங்கும் சடை | 124 |
எருத்து - கழுத்து | 140 |
எருவை - கழுகு | 37 |
எருவை - பருந்து | 97 |
எல் - விளக்கம் | 159 |
எல்லாக - விளக்கமுற | 141 |
எல்லாம் - இருதிணைப்பொது | 28, 34, 94 |
எல்லை - அளவு | 141 |
எவ்வளை - இலங்குந்தொடி | 133 |
எவ்வளை - விளக்கத்தினையுடைய தொடி | 143 |
எவ்வம் - மானம் | 137 |
எவ்வம் - துன்பம் | 132 |
எவ்வையர் - எம்தங்கையர் | 143 |
எவனென்பது என்னெனக் குறைந்துநிற்றல் | 19, 95 |
எழீஇனாள் - எழுப்பினாள் | 160 |
எழீஇனாள் - (யாழ்) வாசித்தாள் | 160 |
எழு - கணையம் | 5, 67 |
எழு - யானையைத் தடுக்கும் மரம் | 5, 67 |
எழும் - மிகும் | 63 |
எழுவணி - கணையம்சூழ்ந்த | 5 |
எள்ளுதல் - இகழுதல் | 41 |
எற்றி - அடித்துக்கொண்டு | 26 |
எறிதல் - அழித்தல் | 6, 97 |
எறிதல் - வெட்டுதல் | 15, 18 |
எறிந்தன்று - அழித்தது | 6 |
எறிமுந்நீர் - அலையுங்கடல் | 102 |
என்றி - என்று சொல்லாநின்றாய் | 146 |
என்றும் - என்று சொல்லுவோம் | 90 |
என்னோரும் - எத்தன்மையை யுடையோரும் | 91 |