ஏ - ஈற்றசை 2
   ஏ - எய்யுந்தொழில் 44
   ஏக - கழல 138
   ஏகின்று - சென்றது 14
   ஏசின்று - புல்லற்கூறியது (ஏசியது) 143
   ஏணி 54
   ஏதம் - குற்றம் 77
   ஏதிலாளன் - அயலான் 135
   ஏந்தல் - எடுத்தல் 66
   எந்திய - உயர்த்த 103
   ஏந்திழை - அழகிய ஆபரணம் 41
   ஏந்துபுகழ் - உயர்ந்தபுகழ் 113
   ஏந்துவாட்டானை - உயர்ந்த வாளையுடைய சேனை 84
   ஏப்புழைஞாயில் - ஏவறையையுடைய முடக்கு 42
   ஏமம் - காவல் 110
   ஏமுற்று - ஏக்கமுற்று 151
   ஏமுற்று - மயங்கி 151
   ஏய்க்கும் - ஒக்கும் 15
   ஏய - ஏவின 43
   ஏயா - இயையா 151
   ஏர் - எருது 128
   ஏர் - ஏர்த்தொழில் 5
   ஏர் - ஒப்பு 77
   ஏர் - பொருந்தின 5
   ஏர்க - எழுக 93
   ஏவறை 42, 53
   ஏவுதல் - சொல்லல் 32
   ஏழகம் = ஏழகத்தகர் - ஆட்டுக்கிடாய் 113
   ஏற்றார் - எதிர்த்தார் 6
   ஏற்றினம் - ஏறுகளையுடைய பசுநிரை 5
   ஏறிட்டவில் 32
   ஏறு - யானை 56
   ஏன்று - மேற்கொண்டு 81
   ஏனல் - தினை 146
   ஏனும் - ஆயினும் 62