பக்கம் எண் :

பத்தாவது
பொதுவியற்படலம்
(சூத்திரம் 10)

சீர்சால் போந்தை வேம்போ டாரே
உன்ன நிலையே யேழக நிலையே
கழனிலை யேனைக் 1கற்காண் டல்லே
கற்கோணிலையே கன்னீர்ப் படுத்தல்
5கன்னடு தல்லே கன்முறை பழிச்சல்
இற்கொண்டு புகுத லென்றபன் னிரண்டும்
பொதுவியற் பால வென்மனார் புலவர்.


என்-னின், பொதுவியற்பாலவருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) போந்தைமுதல் இற்கொண்டு புகுதல்இறுதியாகிய பன்னிரண்டும் பொதுவியற்பாலவாம் எ-று. அவற்றுள்:-

240. போந்தை

கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பிற்
புலவேல் வானவன் பூப்புகழ்ந் தன்று.

(இ - ள்.) பொருந்தா வேந்தர் கிட்டின பூசலிடத்துப்புலால் நாறும் வேலினையுடைய சேரன் சூடும் பூவைப்புகழ்ந்தது எ-று.

வ - று.2குடையலர் காந்தட்டன் கொல்லிச்சுனைவாய்த்
3தொடையவிழ் தண்குவளை சூடான் - புடைதிகழும்
தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன்
போரெதிற் போந்தையாம் பூ.

(இ - ள்.) குடைபோன்மலரும் கோடலையுடைய தன்கொல்லிமலைச் சுனையிடத்துக் கட்டலரும் குளிர்ந்த செங்கழுநீர்ப்பூவை மலையான்; பக்கம் விளங்கும் பகைவர் தேர்த்தானைநடுங்கக் கோபிக்கும் திருந்திய வேலையுடைய சேரன், பூசல் தோற்றிற் பனந்தோடாம், அவன் சூடும்பூ. எ- று.

(1)

241. வேம்பு

விரும்பா ரமரிடை வெல்போர் வழுதி
சுரும்பார் முடிமிசைப் பூப்புகழ்ந் தன்று.

(இ - ள்.) பகைவர் பூசலிடத்து வெல்லும்போரையுடைய பாண்டியன் வண்டுநிறைந்த மகுடத்தின்மீதேபுனையும் மலரினைப் புகழ்ந்தது எ-று.

வ - று.2தொடியணிதோ ளாடவர்தும்பை புனையக்
கொடியணிதேர் கூட்டணங்கும் போழ்தின் - முடியணியும்


1. தொல். புறத். சூ. 5: 19-20; சிலப். பதிகம், 84-5. 2. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 3. (பி-ம்) 'தொடையளி'.