(இ - ள்.) மிகவும் பெரிய கங்குலிடத்துப்பெரிய வரைநாடனை உறக்கத்தை ஒழிந்து சயனத்திலேபற்றியது எ-று. வ - று. யானை தொடருங் கொடிபோல யானுன்னைத் தானை தொடரவும் போதியோ - மானை மயக்கரிய வுண்கண் மடந்தைதோ ளுள்ளி இயக்கருஞ் சோலை யிரா. (இ - ள்.) யானையைப்பற்றும் வல்லிபோல நின்னையான் புடைவையைப் பற்றவும் போகின்றாயோ? மானைமயக்கும் செவ்வரி கருவரி பரந்த மையுண்ட கண்ணையுடைய மடவாள்தன் தோளைக் கருதி உலாவுதற்கரிய சோலையிடத்து இரவுப்பொழுதிலே. தானை தொடரவும் போதியோ எ-று. (18) 324. செல்கென விடுத்தல் பாயிருட் கணவனைப் படர்ச்சிநோக்கிச் சேயிழை யரிவை செல்கென விடுத்தன்று. (இ - ள்.) பரந்த இருட்காலத்துக் கொழுநனைச் செலவைப் பார்த்துச் சிவந்த ஆபரணத்தினையுடைய தலைவி போவாயாகவென்று சொல்லியது எ-று. வ - று. விலங்குந ரீங்கில்லை வென்வேலோய்சென்றீ இலங்கிழை யெவ்வ நலியக் - கலங்கிக் குறியுள் வருந்தாமைக் குன்றுசூழ் சோலை நெறியுள் விலக நிலா. (இ - ள்.) நின்னைப் போகாமலே விலக்குவார் இவ்விடத்து ஒருவரும் இல்லை; வென்றிவேலினையுடையோய், செல்வாயாக; விட்டு விளங்கும் ஆபரணத்தையுடையாள் துன்பம் நெருக்க மயங்கிக் குறியிடத்து நின்னைக்காணாது வருத்தமுறாதபடி மலைசுற்றின சோலையிடத்து வழியுள்ளேவிரிவதாக, நிலா எ-று. (19) விரிக நிலா; வென்வேலோய் சென்றீ. பெருந்திணைப் படலத்துட் பெண்பாற்கூற்று முற்றிற்று.
[இருபாற் பெருந்திணை] (சூத்திரம் 17.) | சீர்செல வழுங்கல் செழுமட லூர்தல் தூதிடை யாட றுயரவற் குரைத்தல் கண்டுகை சோர்தல் பருவ மயங்கல் ஆண்பாற் கிளவி பெண்பாற் கிளவி | 5 | தேங்கமழ் கூந்தற் றெரிவை வெறியாட் டரிவைக் கவடுணை பாண்வர வுரைத்தல் |
|