126. தொகைநிலை எம்மதிலி னிகல்வேந்தரும் அம்மதிலி னடியடைந்தன்று. (இ - ள்.) எல்லா அரணிடத்துமுள்ள மாறுபாட்டு மன்னர் பலரும் அந்த எயிலிடத்தே அவன் பாதத்தைச் சேர்ந்தது எ - று. வ - று. நாவல் பெயரிய ஞாலத் தடியடைந் தேவ லெதிரா திகல்புரிந்த - காவலர் வின்னின்ற தானை விறல்வெய்யோற் கம்மதிலின் முன்னின் றவிந்தார் முரண். (இ - ள்.) சம்புத்தீவினுள் அவன் தாள்நிழலையடைந்து சொன்ன சொல்லை ஏற்றுக்கொள்ளாது மாறுபாட்டை மேற்கொண்ட மன்னர் சிலைவலிநின்ற சேனையாற் சிறந்த வெற்றியை வேண்டுவோற்கு அவன் சூழ்ந்த அரணின் முன்னே நின்று கெட்டார், மாறுபாடு எ - று. நாவல் பெயரியஞாலம் - நாவலின் பெயர்பெற்றபூமி; சம்புத்தீவு (32) உழிஞைத்திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டு முப்பத்தொன்றும் முடிந்தன. ஆறாவது உழிஞைப்படலம் முற்றிற்று.
ஏழாவது தும்பைப்படலம் (சூத்திரம் 7.) | துன்னருங் கடும்போர்த் தும்பை தும்பை யரவம் தன்னிக ரில்லாத் தானை மறமே யானை மறத்தொடு குதிரை மறமே தார்நிலை தேர்மறம் பாணது பாட்டே | 5 | இருவருந் தபுநிலை யெருமை மறமே ஏம வெருமை நூழி லென்றா நூழி லாட்டே முன்றேர்க் குரவை பின்றேர்க் குரவை பேய்க்குர வையே களிற்றுட னிலையே யொள்வா ளமலை | 10 | தானை நிலையே வெருவரு நிலையே சிருங்கார நிலையே யுவகைக் கலுழ்ச்சி தன்னை வேட்ட றொகைநிலை யுளப்பட நன்பொரு டெரிந்தோர் நாலிரு மூன்றும் வண்பூந் தும்பை வகையென மொழிப. |
என்-னின், தும்பைத்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. |