| நடை ஊறு சொல் மடந்தை நல்குவதும் நம்மேல் இடையூறு நீங்குவதும் எல்லாம் - புடை ஊறும் சேனைமுகத் தாள் இரியச் சீறு முகத்து ஊறு மதத்து ஆனை முகத்தானை நினைத்தால்.
கண் அவனைக் காண்க, இரு காது அவனைக் கேட்க, வாய்ப் பண் அவனைப் பாட, பதம் சூழ்க, - எள் நிறைந்த நெய் ஒத்து நின்றானை நீல மிடற்றானை என் கை ஒத்து நேர் கூப்புக. |