| மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத், தென்மலை இருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண் தமிழ் தா இன்று உணர்ந்த துன்ன அருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல் பன்னிரு புலவரும், பாங்கு உறப் பகர்ந்த, பன்னிரு படலமும் பழிப்பு இன்று உணர்ந்தோன்; ஒங்கிய சிறப்பின் உலகம் முழுது ஆண்ட வாங்குவில் தடக்கை வானவர் மருமான், ஐயனாரிதன் அகல் இடத்தவர்க்கு, மை அறு புறப்பொருள் வழாலின்று விளங்க, வெண்பா மாலை எனப் பெயர் நிறீஇப், பண்புஉற மொழிந்தனன், பான்மையில் தெரிந்தே. |