தொடக்கம் |
வெட்சிப் படலம்
|
|
|
| 1. வெட்சிப் படலம் | | வெட்சி, வெட்சி அரவம், விரிச்சி, செலவு, வேயே, புறத்திறை, ஊர்கொலை, ஆகோள், பூசல் மாற்றே, புகழ் சுரத்து உய்த்தல், தலைத் தோற்றம்மே, தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, உயர் கொடை, புலனறி சிறப்பே, பிள்ளை வழக்கே, பெருந் துடிநிலையே, கொற்றவை நிலையே, வெறியாட்டு, உளப்பட எட்டு இரண்டு ஏனை நான்கொடு தொகைஇ, வெட்சியும் வெட்சித்துறையும் ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| கொளு வெட்சி | 1. | வென்றி வேந்தன் பணிப்பவும் , பணிப்பு இன்றியும், சென்று இகல் முனை ஆ தந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| | 2. | அவற்றுள், மன்னுறுதொழில் தன்னுறுதொழில் |
|
உரை
|
|
|
|
|
| வெட்சி அரவம் | 3. | கலவார் முனைமேல் செலவு அமர்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| விரிச்சி | 4. | வேண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு, ஈண்டு இருள் மாலைச் சொல் ஒர்த்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| செலவு | 5. | வில் ஏர் உழவர் வேற்றுப் புலம் முன்னிக் கல் ஏர் கானம் கடந்து சென்றன்று. |
|
உரை
|
|
|
|
|
| வேய் | 6. | பற்றார் தம் முனைப் படுமணி ஆயத்து, ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| புறத்திறை | 7. | நோக்க அருங் குறும்பின் நூழையும், வாயிலும், போக்கு அற வளைஇப் புறத்து இறுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஊர்கொலை | 8. | விரைபரி கடவி வில் உடை மறவர், குரை அழல் நடப்பக் குறும்பு எறிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஆகோள் | 9. | வென்று ஆர்த்து விறல் மறவர், கன்றோடு மா தழீஇயன்று. |
|
உரை
|
|
|
|
|
| பூசல் மாற்று | 10. | கணம் பிறங்கக் கைக் கொண்டார் பிணம் பிறங்கப் பெயர்த்து இட்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| சுரத்து உய்த்தல் | 11. | அருஞ்சுரத்தும் , அகல் கானத்தும் வருந்தாமல் நிரை உய்த்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தலைத்தோற்றம் | 12. | உர வெய்யோன் இனந்தழீஇ வரவு உணர்ந்து , கிளை மகிழ்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தந்துநிறை | 13. | வார் வலந்த துடி விம்ம, ஊர் புகல நிரை உய்த்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பாதீடு | 14. | கவர்கணைச் சுற்றும் கவர்ந்த கண நிரை அவர் அவர் வினைவயின் அறிந்து ஈந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| உண்டாட்டு | 15. | தொட்டு இமிழும் கழல் மறவர் மட்டு உண்டு மகிழ் தூங்கின்று. |
|
உரை
|
|
|
|
|
| கொடை | 16. | ஈண்டிய நிரை ஒழிவு இன்றி, வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று. |
|
உரை
|
|
|
|
|
| புலன் அறி சிறப்பு | 17. | வெம்முனை நிலை உணர்த்தியோர்க்குத், தம்மினும் மிகச் சிறப்பு ஈந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பிள்ளைவழக்கு | 18. | பொய்யாது புள் மொழிந்தார்க்கு, வையாது வழக்கு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| துடிநிலை | 19. | தொடு கழல் மறவர் தொல்குடி மரபின் படு கண் இமிழ் துடிப் பண்பு உரைந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கொற்றவை நிலை | 20. | ஒளியின் நீங்கா விறல் படையோள் அளியின் நீங்கா அருள் உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வெறியாட்டு | 21. | வால் இழையோர் வினை முடிய வேலனொடு வெறி ஆடின்று. |
|
உரை
|
|
|
|