தொடக்கம் |
கரந்தைப் படலம்
|
|
|
| 2. கரந்தைப் படலம் | | கதம் மலி கரந்தை , கரந்தை அரவம், அதரிடைச் செலவே, அரும் போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத்து ஒழிதல், ஆள்எறி பிள்ளை , பிள்ளைத் தெளிவே, பிள்ளை ஆட்டொடு , கையறு நிலையே, நெடுமொழி கூறல் , பிள்ளைப் பெயர்ச்சி, வேத்தியல் மலிபே , மிகு குடி நிலை, என அருங்கலை உணர்ந்தோர் , அவை பதினான்கும் கரந்தையும் கரந்தைத் துறையும் என்ப. |
|
உரை
|
|
|
|
|
| கரந்தை | 22. | மலைத்து எழுந்தோர் மறம் சாயத் தலைக் கொண்ட நிரை பெயர்த்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கரந்தை அரவம் | 23. | நிரைகோள் கேட்டுச் செய் தொழில் ஒழிய. விரைவனர் குழூஉம் வகை உரைத்தன்று |
|
உரை
|
|
|
|
|
| அதரிடைச் செலவு | 24. | ஆற்றார் ஒழியக் கூற்று எனச் சினைஇப் போற்றார் போகிய நெறியிடை ஏகின்று. |
|
உரை
|
|
|
|
|
| போர் மலைதல் | 25. | வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ உட்குவரத் தாக்கி உறழ் செருப் புரிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| புண்ணொடு வருதல் | 26. | மண்ணோடு புகழ் நிறீஇப், புண்ணோடு தான் வந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| போர்க்களத்து ஒழிதல் | 27. | படைக்கு ஓடா விறல் மறவரைக் கடைக்கொண்டு, களத்து ஒழிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஆள்எறி பிள்ளை | 28. | வருவாரை எதிர்விலக்கி, ஒரு தான் ஆகி ஆள் எறிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பிள்ளைத் தெளிவு | 29. | கண் மகிழ்ந்து துடிவிம்மப் புண் மகிழ்ந்து புகன்று ஆடின்று. |
|
உரை
|
|
|
|
|
| பிள்ளை ஆட்டு | 30. | கூடலர் குடர் மாலை சூட்டி, வேல் திரித்து விரும்பி ஆடின்று. |
|
உரை
|
|
|
|
|
| கையறுநிலை | 31. | வெருவரும் வாள் அமர் விளிந்தோன் கண்டு கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| நெடுமொழி கூறல் | 32. | மன் மேம்பட்ட மதிக் குடையோற்குத் தன் மேம்பாடு தான் எடுத்து உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பிள்ளைப் பெயர்ச்சி | 33. | போர் தாங்கிப் புள் விலங்கியோனைத் தார்வேந்தன் தலையளித்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வேத்தியல் மலிபு | 34. | தோள் வலிய வய வேந்தனை, வாள் வலி மறவர் சிறப்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| குடி நிலை | 35. | மண் திணி ஞாலத்துத் தொன்மையும் , மறனும், கொண்டு பிறர் அறியும் குடி வரவு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|