தொடக்கம் |
வஞ்சிப் படலம்
|
|
|
| 3. வஞ்சிப் படலம் | | வாடா வஞ்சி , வஞ்சி அரவம், கூடார்ப் பிணிக்கும் குடை நிலை , வாள் நிலை, கொற்றவை நிலையே, கொற்ற வஞ்சி, குற்றம் இல் சிறப்பின் கொற்ற வள்ளை, பேர் ஆண் வஞ்சி , மாராய வஞ்சி, நெடுமொழி வஞ்சி, முதுமொழி வஞ்சி, உழபுல வஞ்சி , மழபுல வஞ்சி, கொடையின் வஞ்சி, குறுவஞ்சிய்யே, ஒருதனி நிலையொடு , தழிஞ்சி , பாசறை, பெருவஞ்சிய்யே , பெருஞ்சோற்று நிலையொடு, நல்லிசை வஞ்சி என நாட்டினர் தொகுத்த எஞ்சாச் சீர்த்தி இருபத்தொன்றும் வஞ்சியும் , வஞ்சித் துறையும் , ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| வஞ்சி | 36. | வாடா வஞ்சி தலை மலைந்து, கூடார் மண் கொளல் குறித்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வஞ்சி அரவம் | 37. | வள் வார் முரசமொடு வயக் களிறு முழங்க ஒள் வாள் தானை உருத்து எழுந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| குடை நிலை | 38. | பெய் தாமம் சுரும்பு இமிரப் பெரும் புலவர் புகழ் பாடக் கொய் தார் மன்னவன் குடை நாள் கொண்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| வாள் நிலை | 39. | செற்றார் மேல் செலவு அமர்ந்து, கொற்ற வாள் நாள் கொண்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| கொற்றவை நிலை | 40. | நீள் தோளான் வென்றி கொள்க என நிறை மண்டை வலன் உயரிக் கூடாரைப் புறம் காணும் கொற்றவை நிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| | 41. | மைந்து உடை ஆடவர் செய் தொழில் கூறலும், அந்தம் இல் புலவர் அது என மொழிப. |
|
உரை
|
|
|
|
|
| கொற்ற வஞ்சி | 42. | வையகம் வணங்க வாள் ஓச்சினன் எனச் செய் கழல் வேந்தன் சீர் மிகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கொற்ற வள்ளை | 43. | மன்னவன் புகழ் கிளந்து, ஒன்னார் நாடு அழிபு இரங்கின்று. |
|
உரை
|
|
|
|
|
| பேராண் வஞ்சி | 44. | கேள் அல்லார் முனை கெடுத்த, மீளியார்க்கு மிக உய்த்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| | 45. | அருந்திறை அளப்ப ஆறிய சினத்தொடு பெரும் பூண் மன்னவன் பெயர்தலும் அதுவே. |
|
உரை
|
|
|
|
|
| மாராய வஞ்சி | 46. | மற வேந்தனில் சிறப்பு எய்திய விறல் வேலோர் நிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| நெடுமொழி வஞ்சி | 47. | ஒன்னாதார் படை கெழுமித் தன் ஆண்மை எடுத்து உரைத்தன்று |
|
உரை
|
|
|
|
|
| முதுமொழி வஞ்சி | 48. | தொல் மரபின் வாள் குடியின் முன்னோனது நிலை கிளந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| உழபுலவஞ்சி | 49. | நேராதார் வள நாட்டைக் கூர் எரி கொளீஇயன்று. |
|
உரை
|
|
|
|
|
| மழபுல வஞ்சி | 50. | கூடார் முனை கொள்ளை சாற்றி வீடு அறக் கவர்ந்த வினை மொழிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கொடை வஞ்சி | 51. | நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கிப் பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று. |
|
உரை
|
|
|
|
|
| குறு வஞ்சி | 52. | மடுத்து எழுந்த மற வேந்தர்க்குக் கொடுத்து அளித்துக் குடி ஓம்பின்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 53. | கட்டூரது வகை கூறினும் அத் துறைக்கு உரித்தாகும். |
|
உரை
|
|
|
|
|
| ஒரு தனி நிலை | 54. | பொரு படையுள் கல்சிறை போல், ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தழிஞ்சி | 55. | அழிகுநர் புறக்கொடை அயில் வாள் ஒச்சாக் கழி தறுகண்மை காதலித்து உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பாசறை நிலை | 56. | மதிக்குடைக் கீழ் வழி மொழிந்து மன்னர் எல்லாம் மறம் துறப்பவும் பதிப்பெயரான் மற வேந்தன் பாசறை இருந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பெரு வஞ்சி | 57. | முன் அடையார் வள நாட்டைப் பின்னர் உடன்று எரி கொளீஇயன்று. |
|
உரை
|
|
|
|
|
| பெருஞ் சோற்று நிலை | 58. | திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவர் எனப், பெருஞ்சோறு ஆடவர் பெறும்முறை வகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| நல் இசை வஞ்சி | 59. | ஒன்னாதார் முனை கெட இறுத்த வென்வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 60. | இறுத்தபின் அழிபு இரங்கல் இறுத்து உரைப்பினும் அத்துறை ஆகும். |
|
உரை
|
|
|
|