தொடக்கம் |
காஞ்சிப் படலம்
|
|
|
| 4. காஞ்சிப் படலம் | | காஞ்சி, காஞ்சி, அதிர்வே, தழிஞ்சி, பெரும் படைவழக்கொடு, பெருங்காஞ்சிய்யே, வாள் செலவு என்றா, குடையது செலவே, வாஞ்சினக் காஞ்சி, பூக்கோள் நிலையே, புகழ்த் தலைக்காஞ்சி, தலை, மாராயம், தலையொடு முடிதல், மறப்பெயர்க், காஞ்சி, மாற்ற அரும் பேய்நிலை, பேய்க் காஞ்சிய்யே, தெட்ட காஞ்சி, தொடாக் காஞ்சிய்யே, மன்னைக் காஞ்சி , கள் காஞ்சிய்யே, ஆஞ்சிக் காஞ்சி, மகள்பாற் காஞ்சி, முனைகடி முன் இருப்பு ,உளப்படத் தொகைஇ, எண்ணிய வகையான் இருபத்து இரண்டும் கண்ணிய காஞ்சி,துறை என மொழிப. |
|
உரை
|
|
|
|
|
| காஞ்சி | 61. | வேம் சின மாற்றான் விடுதர, வேந்தன் காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று. |
|
உரை
|
|
|
|
|
| காஞ்சி அதிர்வு | 62. | மேல்வரும் படைவரன் மிகவும், ஆற்றா வேல் வல் ஆடவன் விறல் மிகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தழிஞ்சி | 63. | பரந்து எழுதரு படைத் தானை, வரம்பு இகவாமைச் சுரம் காத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| படை வழக்கு | 64. | முத்து அவிர் பூண் மற வேந்தன், ஒத்தவர்க்குப் படை வழங்கின்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 65. | கொடுத்த பின்னர்க் கழல் மறவர் எடுத்து உரைப்பினும் அத்துறை ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| பெருங் காஞ்சி | 66. | தாங்கு திறன் மறவர் தத்தம் ஆற்றல், வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| வாள் செலவு | 67. | அரு முனையான் அறை கூவினபின், செரு முனைமேல் வாள் சென்றன்று. |
|
உரை
|
|
|
|
|
| குடை செலவு | 68. | முதுகுடி மறவர் முன்னுறச் சூழக் கொதி அழல் வேலோன் குடை சென்றன்று. |
|
உரை
|
|
|
|
|
| வஞ்சினக் காஞ்சி | 69. | வெஞ்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப, வஞ்சினம் கூறிய வகை மொழிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பூக்கோள் நிலை | 70. | கார் எதிரிய கடல் தானை, போர் எதிரிய பூக் கொண்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| தலைக் காஞ்சி | 71. | மைந்து உயர மறம் கடந்தான் பைந்தலைச் சிறப்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தலை மாராயம் | 72. | தலை கொடு வந்தான் உள் மலியச் சிலையுடை வேந்தன் சிறப்பு ஈந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தலையொடு முடிதல் | 73. | மண்டு அமருள் மாறா மைந்தின் கொண்டான் தலையொடு கோல்வளை முடிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| மறக் காஞ்சி | 74. | இலைப் பொலிதார் இகல் வேந்தன். மலைப் பொழி மறம் கடைஇயன்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 75. | மண் கெழு மறவன் மாறுநிலை நோனான் புண் கிழித்து முடியினும் அத் துறை ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| பேய் நிலை | 76. | செரு வேலோன் திறன் நோக்கிப் பிரிவு இன்றிப் பேய் ஒம்பின்று. |
|
உரை
|
|
|
|
|
| பேய்க் காஞ்சி | 77. | பிணம் பிறங்கிய களத்து வீழ்ந்தாற்கு அணங்கு ஆற்ற அச்சுறீஇயன்று. |
|
உரை
|
|
|
|
|
| தொட்ட காஞ்சி | 78. | வியல் மனை விடலை புண் காப்பத் துயல் முலைப் பேழ்வாய்ப் பேய் தொட்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| தொடாக் காஞ்சி | 79. | அடல் அஞ்சா நெடுந்தகை புண் தொடல் அஞ்சித் துடித்து நீங்கின்று. |
|
உரை
|
|
|
|
|
| மன்னைக் காஞ்சி | 80. | வியல் இடம் மருள விண் படர்ந்தோன் இயல்பு ஏத்தி அழிபு இரங்கின்று. |
|
உரை
|
|
|
|
|
| கள் காஞ்சி | 81. | நற மலியும் நறுந் தாரோன், மற மைந்தர்க்கு மட்டு ஈந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஆஞ்சிக் காஞ்சி | 82. | காதல் கணவனொடு கனை எரி மூழ்கும் மாதர் மெல்லியலின் மலிபு உரைத்தன்று . |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 83. | மன் உயிர் நீத்த வேலின் மனையோள் இன் உயிர் நீப்பினும் அத்துறை ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| மகள்பால் காஞ்சி | 84. | ஏந்திழையாள் தருக என்னும் வேந்தனொடு வேறு நின்றன்று. |
|
உரை
|
|
|
|
|
| முனைகடி முன் இருப்பு | 85. | மன்னர் யாரையும் மறம் காற்றி முன் இருந்த முனை கடிந்தன்று. |
|
உரை
|
|
|
|