சிறப்பின் பொது இயல்
 
சிறப்பின் பொது இயல்
முதுபாலையே, சுரநடை,ஏனைத்
தபுதார நிலையே, தாபத நிலையே,
தலைப்பெயல் நிலையே, பூசல் மயக்கே,
மாலை நிலையே , மூதானந்தம்,
ஆனந்தம்மே, ஆனந்தப் பையுள்,
கையறு நிலை , உளப்படப் பதினொன்றும்,
மையறு சிறப்பின் பொது இயல் பால.
உரை
   
முதுபாலை
254. காம்பு உயர் கடத்திடைக் கணவனை இழந்த
பூங்கொடி மடந்தை புலம்பு உரைத்தன்று.
உரை
   
சுரநடை
255. மூது அரில் நிவந்த முதுகழை ஆரிடைக்
காதலி இழந்த கணவன் நிலை உரைத்தன்று.
உரை
   
தபுதார நிலை
256. புனையிழை இழந்தபின் புலம்பொடு வைகி
மனையகத்து உறையும் மைந்தன் நிலை உரைத்தன்று.
உரை
   
தாபத நிலை
257. குருந்து அலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடங் கண்ணி கைம்மை கூறின்று.
உரை
   
தலைப் பெயல் நிலை
258. இன் கதிர் முறுவல் பாலகன் என்னும்
தன் கடன் இறுத்த தாய் தபுநிலை உரைத்தன்று.
உரை
   
பூசல் மயக்கு
259. பல் இதழ் மழைக்கண் பாலகன் மாய்ந்தெனப்
புல்லிய பெருங்கிளைப் பூசல் கூறின்று.
உரை
   
260. வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும்
ஆய்ந்த புலவர் அது என மொழிப.
உரை
   
மாலை நிலை
261. கதிர்வேல் கணவனொடு கனை எரி முழுக
மதி ஏர் நுதலி மாலை நின்றன்று.
உரை
   
மூதானந்தம்
262. கயல் ஏர் கண்ணி கணவனொடு முடிய,
வியல் நெறிச் செல்வோர் வியந்து உரைத்தன்று.
உரை
   
263. கொடியான் கூர்ங் கணை குளிப்பத் தன் தொழில்
முடியான் அவிதலும் மூதானந்தம்.
உரை
   
ஆனந்தம்
264. ஆடமைத் தோளி, விரிச்சியும் சொகினமும்
வேறுபட அஞ்சி விதுப்புற்றன்று.
உரை
   
இதுவுமது
265. தவப் பெரிய வெஞ்சமம் குறுகும்
அவற்கு இரங்கினும் அத்துறை ஆகும்.
உரை
   
ஆனந்தப் பையுள்
266. விழுமம் கூர, வேய்த்தோள் அரிவை
கொழுநன் வீயக் குழைந்து உயங்கின்று.
உரை
   
கையறு நிலை
267. செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
கையற உரைத்துக் கை சோர்ந்தன்று.
உரை
   
இதுவுமது
268. கழிந்தோன் தன் புகழ் காதலித்து உரைப்பினும்
மொழிந்தனர் புலவர் அத் துறை என்ப.
உரை