தொடக்கம் |
பெண்பால் கூற்று
|
|
|
| பெண்பால் கூற்று | | காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல், மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல், பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல், கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல், பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| காண்டல் | 294. | தேன் பாய் தெரியல் விடலையைத் திருநுதல் காம்பு ஏர் தோளி கண்டு சோர்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| நயத்தல் | 295. | கல் நவில் திணிதோள் காளையைக் கண்ட நல் நுதல் அரிவை நயப்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| உட்கோள் | 296. | வண்டு அமர் குஞ்சி மைந்தனை நயந்த ஒண்தொடி அரிவை உட்கொண்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| மெலிதல் | 297. | ஒன்றார் கூறும் உறு பழி நாணி, மென் தோள் அரிவை மெலிவொடு வைகின்று. |
|
உரை
|
|
|
|
|
| மெலிவொடு வைகல் | 298. | மணிவளை நெகிழ, மா நலம் தொலைய, அணியிழை மெலிவின் ஆற்றல் கூறின்று. |
|
உரை
|
|
|
|
|
| காண்டல் வலித்தல் | 299. | மை வரை நாடனை மடந்தை பின்னரும் கை வளை சோரக் காண்டல் வலித்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பகல் முனிவு உரைத்தல் | 300. | புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள் பருவரல் உள்ளமொடு பகல் முனிவு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| இரவு நீடு பருவரல் | 301. | புலம்பொடு வைகும் பூங்குழை கங்குல் கலங்கினேன் பெரிது எனக் கசிந்து உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கனவின் அரற்றல் | 302. | ஒண்தொடி மடந்தை உரு கெழு கங்குலில் கண்டவன் கரப்பக் கனவின் அரற்றின்று. |
|
உரை
|
|
|
|
|
| | 303. | பெய்வளை அவனொடு பேணிய கங்குல் உய்குவென் வரின் என உரைப்பினும் அதுவே. |
|
உரை
|
|
|
|
|
| நெஞ்சொடு மெலிதல் | 304. | அம் சொல் வஞ்சி அல் இருள் செலீஇய நெஞ்சொடு புகன்ற நிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 305. | வரி வளை நெகிழ்த்தோன் முன் செல வலித்தேன் அரிவையர் அறிக என உரைப்பினும் அதுவே. |
|
உரை
|
|
|
|