பெண்பால் கூற்று
 
12. பெருந்திணைப் படலம்
பெண்பால் கூற்று
வேட்கை முந்து உறுத்தல் , பின் நிலை முயறல்,
பிரிவிடை ஆற்றல் , வரவு எதிர்ந்து இருத்தல்,
வாராமைக்கு அழிதல் , இரவுத்தலைச் சேறல்,
இல்லவை நகுதல் , புலவியுள் புலம்பல்,
பொழுது கண்டு இரங்கல் , பரத்தையை ஏசல்,
கண்டு கண் சிவத்தல் , காதலில் களித்தல்,
கொண்டு அகம் புகுதல் , கூட்டத்துக் குழைதல்,
ஊடலுள் நெகிழ்தல் , உரை கேட்டு நயத்தல்,
பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்,
பள்ளிமிசைத் தொடர்தல் , செல்க என விடுத்தல், என
ஒன்பதிற்று இரட்டியோடு ஒன்றும் உளப்படப்
பெண்பால் கூற்றுப் பெருந்திணைப் பால.
உரை
   
வேட்கை முந்து உறுத்தல்
306. கைஒளிர் வேலவன் கடவக் காமம்
மொய் வளைத் தோளி முந்துற மொழிந்தன்று.
உரை
   
பின் நிலை முயறல்
307. முன் இழந்த நலன் நசைஇப்
பின் நிலை மலைந்தன்று.
உரை
   
பிரிவிடை ஆற்றல்
308. இறை வளை நெகிழ இன்னாது இரங்கிப்
பிறைநுதல் மடந்தை பிரிவிடை ஆற்றின்று.
உரை
   
வரவு எதிர்ந்து இருத்தல்
309. முகை புரை முறுவல் முள் எயிற்று அரிவை
வகை புனை வள மனை வரவு எதிர்ந்தன்று.
உரை
   
வாராமைக்கு அழிதல்
310. நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட
வடிவேல் அண்ணல் வாராமைக்கு அழிந்தன்று.
உரை
   
இரவுத் தலைச் சேறல்
311. காண்டல் வேட்கையொடு கனை யிருள் நடுநாள்
மாண்ட சாயல் மனை இறந்தன்று.
உரை
   
இல்லவை நகுதல்
312. இல்லவை சொல்லி இலங்கு எயிற்று அரிவை
நல் வயல் ஊரனை நகை மிகுத்தன்று.
உரை
   
புலவியுள் புலம்பல்
313. நல வளை மடந்தை நல் தார் பரிந்து
புலவி ஆற்றாள் புலம்புற்றன்று.
உரை
   
பொழுது கண்டு இரங்கல்
314. நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும்
பொன்தொடி அரிவை பொழுது கண்டு இரங்கின்று.
உரை
   
பரத்தையை ஏசல்
315. அணி வயல் ஊரனொடு அப்பு விழவு அமரும்
பணிமொழி அரிவை பரத்தையை ஏசின்று.
உரை
   
கண்டு கண் சிவத்தல்
316. உறு வரை மார்பன் ஒள் இணர் நறுந்தார்
கறுவொடு மயங்கிக் கண் சிவந்தன்று.
உரை
   
காதலில் களித்தல்
317. மைவரை நாடன் மார்பகம் பொருந்திக்
கைவிடல் அறியாக் காதலில் களித்தன்று.
உரை
   
கொண்டு அகம் புகுதல்
318. காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக்
கோதையால் பிணித்துக் கொண்டு அகம் புக்கன்று.
உரை
   
கூட்டத்துக் குழைதல்
319. பெய் தார் அகலம் பிரிதல் ஆற்றாக்
கொய் தழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று.
உரை
   
ஊடலுள் நெகிழ்தல்
320. நள்ளிருள் மாலை நடுங்கு அஞர் நலிய
ஒள் வளைத் தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று.
உரை
   
உரை கேட்டு நயத்தல்
321. துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி
உயர் வரை நாடன் உரை கேட்டு நயந்தன்று.
உரை
   
பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்
322. கோடு உயர் வெற்பன் கூப்பிய கையொடு
பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கின்று.
உரை
   
பள்ளிமிசைத் தொடர்தல்
323. மா இருங் கங்குல் மாமலை நாடனைப்
பாயல் நீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று.
உரை
   
செல்க என விடுத்தல்
324. பா இருள் கணவனைப் படர்ச்சி நோக்கிச்
சேயிழை அரிவை செல்க என விடுத்தன்று.
உரை