ஆயவெள்ளம் வழிபடக் கண்டுஇது மாயமோ என்றல் முதலிய ஐந்தும் பிறவும் பிரிவுழிக் கலங்கலின் விரிகளாம் என்பது. |
|
|
இடந்தலைப்பாடு, தெய்வம்தெளிதல் கூடல் விடுத்தல் என்ற மூவகையினை உடைத்து என்பது. |
|
|
தந்த தெய்வம் தரும்எனச் சேறல் முதலிய ஐந்தும் பிறவும் இடந்தலைப்பாட்டின் விரிகளாம் என்பது. |
|
|
சார்தல் முதலிய ஏழும் பாங்கற்கூட்டத்து வகைகளாம் என்பது. |
|
|
தலைவன் பாங்கனைச்சார்தல் முதலிய இருபத்துநான்கும் பிறவும் பாங்கற்கூட்டத்து விரிகளாம் என்பது. |
|
|
முன்உறவுணர்தல் முதலிய மூன்றும் பாங்கி மதி உடன்பாட்டின் வகைகளாம் என்பது. |
|
|
நாற்றம் முதலியவற்றால் தலைவியை ஐயம்உற்று ஓர்தல் முதலிய எட்டும் பிறவும் பாங்கி மதிஉடன் பாட்டின் விரிகளாம் என்பது. |
|
|
இரந்து பின் நிற்றல் முதலிய பன்னிரண்டும் தோழியிற் கூட்டத்தின் வகைகளாம் என்பது. |
|
|
தலைவன் உட்கோள் சாற்றல் முதலிய அறுபத்தொன்றும் பிறவும் தோழியிற்கூட்டத்தின் விரிகளாம் என்பது. |
|
|
கூட்டல் முதலிய நான்கும் பகற்குறி வகைகளாம் என்பது. |
|
|
குறியிடம் கூறல் முதலிய பன்னிரண்டும் பிறவும் பகற்குறி விரிகளாம் என்பது. |
|
|