பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                                19


 

 முன்னிலை எனவும், முன்னிலைப் புறமொழி எனவும் அறத்தொடுநிலை
  இருவகைப்படும் என்பது.                                    .... 160

 கையறுதோழி கண்ணீர் துடைத்தல் முதலிய பதினொன்றும் பிறவும்
  அறத்தொடு நிற்றலின் விரியாம் என்பது                        .... 161

 போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்ற மூன்றும் களவு
  வெளிப்பாட்டிற்கு உரிய கிளவித் தொகைகளாம் என்பது           .... 162

 போக்கு அறிவுறுத்தல் முதலாக உடன்போக்கு எட்டு வகைப்படும்
  என்பது.                                                 ..... 163

 பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல் முதலாகிய பதினெட்டுக்
  கிளவியும் உடன்போக்கின் விரியாம் என்பது.                   ..... 164

 செவிலி புலம்பல் முதலிய ஐந்தும் கற்பொடு புணர்ந்த கவ்வையின்
  வகைகளாம் என்பது.                                       ..... 165

 வினவிய பாங்கியின் உணர்ந்தகாலை இனையல் என்போர்க்கு எதிர்
  அழிந்து மொழிதல் முதலிய இருபத்தொன்றும் பிறவும் கற்பொடு
  புணர்ந்த கவ்வையின் விரியாம் என்பது.                       ..... 166

 தெளித்தல் முதலிய நான்கும் மீட்சியின் விரியாம் என்பது.          .... 167

 தலைவி சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தல்
  முதலாகக் கூறப்பட்ட ஆறும் மீட்சியின் விரியாம் என்பது.         .... 168

 தலைவியை உடன்போய் வரைந்து மீடற்கும் அவள் மனை வரைதற்கும்
  தன்மனைவரைதற்கும், மீட்சியின் விரியில் செவிலிகூற்று ஒழிந்த ஐந்தும்
  உரியவாம் என்பது.                                        .... 169