வினாதல் செப்பல் மேவல் என்று, தலைவன் மீண்டு வந்து தன்
மனையின்கண் வரைதல் மூவகைத்து என்பது. .... 170
பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின் செவிலியை
வினாதல் முதலிய ஐந்தும் தன்மனை வரைதலின் விரியாம் என்பது. .... 171
நற்றாய் மணன் அயர்வேட்கை ஒன்றும் ஒழித்து அல்லாத நான்கும்,
தலைமகன் புணர்ந்து உடன் போய்த் தலைமகளைத் தன் ஊரில்
வரைந்து மீடற்கு உரியவாம் என்பது. .... 172
தலைவன் தம்மூர் சார்ந்தமை உணர்த்தல் முதலாகப் பாங்கி தான் அது
முன்னே சாற்றியது உரைத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட கிளவி
பதினொன்றும் உடன் போய் மீண்டு வரைந்துகோடலின் விரியாம்
என்பது .... 173
போக்கு அறிவுறுத்தல் முதலிய நான்கும் உடன் போக்கு
இடையீட்டின் வகைகளாம் என்பது .... 174
நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன் செலவு உணர்த்தி விடுத்தல்
முதலாகிய ஆறும் உடன் போக்கு இடையீட்டின் விரியாம்
என்பது .... 175
தன் ஊர் வரைதலும் தன் மனை வரைதலும் நீங்கலான ஏனைய
வரைவுகளில், தலைவன், அந்தணர் சான்றோரை முன்னிட்டு
அருங்கலன்களை அணிவித்துத் தலைவியை வரைவான் என்பது. ....176
கற்பாவது மகிழ்வும் ஊடலும் ஊடல் உணர்த்தலும் பிரிவும் பிறவும்
பொருந்தியதாகும் என்பது .... 177
இல்வாழ்க்கை முதலிய ஏழும் கற்பின் கிளவித் தொகையாம் என்பது .... 178