பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-125                              297


 

   பிரியேன் என்றலும்4 பிரிந்துவருகு என்றலும்5
   இடம்அணித்து என்றலும்6 என்றுஇவை ஆறும்
   மடன்அறத் தெரிந்த வன்புறை விரியே.

     இது வன்புறை விரி இத்துணைப் பகுதித்து என்கின்றது.

     இ-ள் அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதலாக
 இடம் அணித்து என்றல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும் தலைமகளது
 அறிவின்மை நீங்க ஆராய்ந்து கூறிய வன்புறையின் விரியாம் என்றவாறு.

விளக்கம் 

 [1 தான் புனைந்தமை வேறுபாட்டைப் புலப்படுத்தும் என்று தலைவி
   நாணியதை அறிந்த தலைவன், "முன்போலவே அணிந்தேன்" என்று
   அவளைத் தெளிவித்தல்.

 2 தனது மிக்க காதலைப் புகழ்ச்சிவகையான் தலைவன் உரைத்தல்.

 3 தம்மைச் சேர்த்து வைத்த ஊழ்வினையின் தன்மையைத் தலைவன்
   கூறுதல்.

 4 தலைவியை "என்றும் பிரியேன்" என்று தலைவன் சொல்லுதல்.

 5 இருவர் நலமும் குறித்துப் "போய் வருவேன்" என்று தலைவன்
   தலைவியிடம் கூறுதல்.

 6 தம்முடைய ஊர்கள் ஒன்றுக்கு ஒன்று அணிமையில் உள்ளவாற்றைத்
   தலைவன் தலைவிக்குக் கூறுதல்.

ஒத்த நூற்பாக்கள் 

     முழுதும் -                                        ந. அ. 128 
      38