113. அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர். இறை. கள.1
இவ்வாசிரியர் தாமே யாத்த நூற்பாக்கள்
உமைஉரு உருமடுத்து உலகுஇளைப்பு ஒழிக்கும்
இமையவன் அடிபணிந்து இயம்புவன் பொருளே. பொ.1
போக்கறு மரபின் பொருள்எனப் படுவது
நோக்கறும் வீடு நுவற்சிசெல் லாமையின்
அறம்பொருள் இன்பம் ஆகும் அதுவே
அகனும் புறனுமென்று ஆயிரு பாற்றாய்
வகைபட வந்த அணிநலம் தழீஇச்
செய்யுள் இடவயின் புல்லிய நெறித்தே. 2
அகம்எனப் படுவது வகைஒரு மூன்றனுள்
இன்பம் என்னும் இயல்பிற்று ஆகி
அகத்துநிகழ் ஒழுக்கம் ஆதல் வேண்டும். 3
அதுவே கைக்கிளை ஐந்திணை ஏனைப்
பெருந்திணை எனஎழு பெற்றித்து ஆகும். 4
அவைதாம்,
ஆவணி முதலா இரண்டிரண்டு ஆக
ஆடி இறுதிய ஆயுங் காலே. 12
மாலை யாமம் வைகுறு என்றா
காலை நண்பகல் எற்பாடு என்றா
அறுவகைத்து என்ப சிறுபொழுது அவைதாம்
படுசுடர் அமையம் தொடங்கி ஐயிரு
கடிகை அளவைய காணுங் காலே. 13