பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா எண்-145                         431


 

 5 தலைவன் தலைவி நாட்டிலுள்ளார் அணிகலன்களையும்
   இயல்பையும்பற்றித் தோழியிடம்   உசாவுதல்.

 6 தன் நாட்டிலுள்ளார் அணிகளையும் இயல்பையும் தோழி தலைவனிடம்
   குறிப்பிடுதல்.

 7 தோழி தலைவிக்குத் தலைவன் இரவுக்குறி விரும்பும் குறிப்பை அறி
   வித்தல்.       

 8 அதற்கு உடன்படாமல் தலைவி தன் மனத்திடை வருந்துதல்.

 9 தலைவி பாங்கியிடம் உடன்பட்டு உரைத்தல்.

 10 தலைவி இரவுக்குறிக்கு உடன்பட்ட செய்தியைத் தோழி தலைவனுக்குத்
   தெரிவித்தல்.

 11 தலைவனைக் குறியிடத்து நிறுத்தித் தோழி தாயினது துயிலுதலைச்
   சோதித்து அறிதல்.

 12 தலைவிக்குத் தலைவன் வந்துள்ள செய்தியைத் தோழி தெரிவித்தல்.

 13 தோழி குறியிடத்துத் தலைவியைக்கொண்டு சேருதல்.

 14 தலைவியைக் குறியிடத்து நிறுத்திப் பூக்கொய்து வருவதாகக் கூறித்
   தோழி நீங்குதல்.

 15 தலைவன் தலைவியை எதிர்ப்படுதல்.

 16 தலைவி தலைவன் வரும் வழியின் அருமையை நினைத்து வருந்துதல்.

 17 "வழி வருவதற்கு எளியதாய் இருந்தது"என்று கூறித் தலைவன்
    தலைவியைத்  தெளிவித்தல்.

 18 தலைவன் தலைவியைக் கூடுதல்.