|
தன்னையரோ யாதும் கூறார்
ஆதலின், கூறுதற்கு அமைந்தார் தலைவியின்
தந்தையும் தன்னையரும், நற்றாயும் செவிலியும் போல்வாரேயாம் என்பது
விளக்கப்பட்டது,
‘எம்வெம் காமம்’-
இது மகட் போக்கிய தாய் தன்னுள் கூறியது:
எம் விருப்பம் ஈடேறுவதாயின், பசிய அணிகலன்களையும்
தலைமையினையும் உடைய கோசர்களுக்கு உரிமையான, மரத்துச்சியில்
திரண்டு விளைந்த பசிய பலாக்காய்களை உண்ணும் பறையின் அடிக்கும்
இடம் போன்ற கண்களைக் கொண்ட பீலிகளை உடைய ஆண்மயில்
செறிந்த
சோலைகளை உடைய துளுநாட்டைப் போல, வறியராய்
வரும்புதியவர்களை
விருந்தோம்பும் பண்பினையுடைய மக்கள் செறிந்த
சேரிகள் பல கொண்ட
செழித்த மூதூர்களை உடைத்தாய்,
அவற்றின்கண்ணும் தனக்கு முன்னரே
அறிமுகமான மக்களை உடையதாய்,
தோழிமார்களும் யானும் தனித்துவருந்த
நன்னனுடைய பாழி என்ற ஊர்
போன்ற காவலை உடைய பரந்த
இல்லத்தின் காவலைக் கடந்து அவனொடு
உடன் போகி, கீழே விழுந்த
இருப்பைப் பூக்களைத் தின்ற மகிழ்வில்
வழியில் தூசி பரக்கக்
கொன்றைப்பழத்தை உண்ணாது கடித்து விட்டுக்
கரடிக் கூட்டம்
செல்லுவதாய்த் தன் துணைவனிடம் ஈடுபட்ட நெஞ்சத்தோடு
வேய்த்தோளியாகிய என்மகள் சென்ற ஆறு, அமைவதாகுக! யான்
அதனையே விரும்புகிறேன் என்றவாறு.
‘எம்வெம் காமம் இயைவதாயின்,
தோழிமாரும் யானும் புலம்ப
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
என் மென்தோள் அஞ்ஞை சென்ற ஆறு
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல’ என்று முடிக்க. |