|
சுணங்குஅணி வனமுலை அணங்குபடத்
திமிரி
நிழல்காண் தோறும் நெடிது வைகி
மணல்காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வால்எயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்
நறுந்தண் பொழில கானம்
குறும்பல் ஊரயாம் செல்லும் ஆறே,’
நற். 9
எனவரும். 195
விளக்கம்
நூற்பா விளக்கம்
பெரும்பாலும் எடுத்துக்காட்டுடன் தொல்காப்பியப்
பொருட்படல 506 ஆம் நூற்பாவில் கூறப்பட்ட பேராசிரியர் உரையேயாம்.
‘நீ விளையாடுக’-
‘தலைவியே! சிறிது நேரம் நீ விளையாடியவாறு ஈண்டுப் பொழுது
போக்குதி;
யான் இளைய களிறு தினவால் உடலைத் தேய்த்துக்கொண்ட
பருத்த
அடிமரத்தை உடைய வேங்கை மரத்தின் மணல் மேடிட்டுள்ள
பெரிய பின்பகுதியில் மறைந்து காண்கிறேன்.
ஆறலைகள்வர் அமர்குறித்து
வரின் அஞ்சாது அவர்களைப் புறங் காண்கிறேன். உன்தமர் வருகுவராயின்
அவரோடு அமர் செய்யின், அவர் உயிர்க்கு ஏதம் விளைவித்தலும் நிகழக்
கூடின், நின்மனம் நோம் ஆதலின், நான் மறைந்தவாறே வாளா
இருக்கிறேன்.’
இக்கருத்து மாறன் அலங்கார மேற்கோள்பாடல் ஒன்றில் மிக
அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. தறுகண்மை பற்றிய பெருமிதத்திற்கு
அப்பாடல்
மேற்கோள் ஆகும்.
‘கீலாலம் குளிறுதிரைக் கெழுகடல்முற்று அகன்ஞாலத்து ஆலாலம்
மிசைப்பவள அருவரையும் கருவரையும் |