பக்கம் எண் :

730இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

தம

தமிதமிஎன் னதுஎனலாம் தவல்அருமாண் தொழில்தன்மை
எமதுஎமதுஎன்று எதிருநரின் உயிர்செகுத்துஈத்து இருநோக்கின்
கடைசிவந்து கருமையவாய்க் கவின்பெறுவார் குழைபோழ்ந்த
வடிபுரைமாண் மதர்மலர்க்கண் மதிபுரைவாள் நறுநுதால்!

[இது தரவு]


இடம்தழுவும்குனிசிலைக்கைஇகல்மறவர்கொடுங்கணையோடு
உடன் றுஎழில்என்சுடர்வடிவேற்குஉணவு ஆதல்ஒருதலையால்
தொடர்ந்துஎழு நின்தமரேல்சண் பகமாறன் துணைஅடிசேர்
திடம்தழுவு ததியர்எனத் தெருள்உறநன்கு அருளுவனே.

வாள்தானைத் துறுமறவர் வயிர அழல் பிழம்புஉகுகண்
கோட்டுஆனை உடன்வரில்என் கூரிலைவேல் அவர்மார்பில்
தீட்டாநை வினை அளிப்பன் நுமரேல்திவ் வியத்துளபத்
தோட்டானைத்தொழுமாறன்தொண்டரின் நன்குஅருளுவனே.

குளிர்மதிவான் அகடுஉரிஞ்சும் கொடித்தேரின் குழுவினொடும்
ஒளிதிகழ்வன் படைமறவர் உடங்குஎழில்வைந் நுதிவேலால்
களிபயில்வெந் தொழில்புரிவன் நுமரேல்வண் கருணேசன்
அளிதிகழ்தே மகிழ்மாறன் அடியரின்நன்கு அருளுவனே.

[இவை தாழிசை]


எனவாங்கு [தனிச் சொல்]

          காணுதி, காணுதி, கனலி தெற்கு எழினும்,
         தாணுவின் நிலைதவ றினும்தவ றாவுரை
         குன்றுசூழ் கூர்ம்பரல் கொடுநெறிக்கு
         ஒன்றும்நீ அழுங்குஅஞர் உறல்ஏ குதியே.’

[இது சுரிதகம்]


‘அழிவிலர் முயலும்’-

     ‘நற்றவம் முயலும் சான்றோர் தம் வழிபடுதெய்வத்தை நேரில்
கண்டாற்போன்ற மகிழ்வுடன், களவுக்காலத்து மனச் சுழற்சியும்
வருத்தமும்தீர உன் மென்தோளை யான் பெற்று