|
13. நுவல்வழித்தோற்றத்திற்குச்
செய்யுள்:-*
“மொய்யண லாநிரை முன்செல்லப் பின்செல்லு
மையணற் காளை மகிழ்துடி-கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
வுய்த்தன் றுவகை யொருங்கு” [பு. வெ. வெட்சி. 12]
எனவரும். நுவல்வழித் தோற்றந் தமர்கவன்றுரைத்தனர் அவர் மகிழ்தற்குக்
காரணமான தோற்றரவு.
14. தந்து நிறைக்குச்
செய்யுள்:-
“தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த
வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று-கண்டா
ளணிநிரை வாண்முறுவ லம்மா வெயிற்றி
மணிநிரை மல்கிய மன்று” [பு. வெ. வெட்சி. 13]
எனவரும்.
15. பாதீட்டிற்குச்
செய்யுள்:-
“ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்-விள்வாரை
மாறிட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற்
கூறிட்டார் கொண்ட நிரை” [பு. வெ. வெட்சி. 14]
எனவரும். ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற்
பாதீடாயிற்று.
16. உண்டாட்டிற்குச்
செய்யுள்:-
“இளிகொண்ட தீஞ்சொ லிளமா வெயிற்றி
களிகொண்ட நோக்கங் கவற்றத்-தெளிகொண்ட
வெங்கண் மலிய விளிவதுகொல் லேற்றார்மேற்
செங்கண் மறவர் சினம்” [பு. வெ. வெட்சி. 15]
எனவரும்.
17. உறுகொடைக்குச்
செய்யுள்:-
“அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண்
வெங்கட்கு வீசும் விலையாகுஞ் - செங்கட்
செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி
வரிச்சிலையாற் றந்த வளம்” [பு. வெ. வெட்சி. 16]
எனவரும்.
* தலைத்தோற்றம் :- புறநா. 262.
1 புறநா. 257, 258 முதலிய 5 செய்யுட்கள் |