பக்கம் எண் :

100 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

     49. கோழிவென்றிக்குச் செய்யுள்:-


    
“பாய்ந்து மெறிந்தும் படிந்தும் பலகாலுங்
     காய்ந்தும்வாய்க் கொண்டுங் கடுஞ்சேவ-லாய்ந்து
     நிறங்கொண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்
     புறங்கண்டுந் தான்வருமே போர்க்கு”
          [பு. வெ. ஒழிபு. 6]

எனவரும்.

    
50. தகர்வென்றிக்குச் செய்யுள்:-

    
“அருகோடி நீங்கா தணைதலு மின்றித்
     திரிகோட்ட மாவிரியச் சீறிப்-பொருகளம்
     புக்கு மயங்கப் பொருது புறவாயை
     நக்குமா நல்ல தகர்”
                          [பு. வெ. ஒழிபு. 7]

எனவரும்.

    
51. யானைவென்றிக்குச் செய்யுள்:-

    
“கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட
     குஞ்சரம் வென்ற கொலைவேழந்-துஞ்சா
     துழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்ற
     னிழலையுந் தான்சுளிக்கு நின்று”            
[பு. வெ. ஒழிபு. 8]

எனவரும். கஞ்சுகம் - அட்டி மதுரம்.

    
52. பூழ்வென்றிக்குச் செய்யுள்:-

    
“சொல்லுஞ் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்காற்
     சொல்லும் பலவுள சொன்னபின்-வெல்லு
     நலம்வர நாடி நடுங்காது நூற்கட்
     புலவரா லாய்ந்தமைத்த பூழ்”               
[பு. வெ. ஒழிபு. 9]

     எனவரும். சொல்லுஞ்சுவட்டவர் - குறும்பூழாளிகள், சொல்லும் பலவுள
என்பது, தீற்றும் அரிசி மந்திரம், பச்சிலை பிசைந்து தடவும் மந்திரம்,
செவியுளுறுத்தும் மந்திரம் முதலியவாம்.

    
53. சிவல்வென்றிக்குச் செய்யுள்:-

    
“ஒட்டியா ரெல்லா முணரார் புடைத்தபின்
     விட்டோட வேண்டுமோ தண்ணுமை-விட்ட
     சுவடேற்கு மாயிற் சுடரிழாய் சோர்ந்து
     கவடேற்க வோடுங் களத்து”
                  [பு. வெ. ஒழிபு. 10]

எனவரும்.

  
இ. வி. - 27