பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]101


     54. கிளிவென்றிக்குச் செய்யுள்:-

    
“இலநா முரப்பதன்க ணெல்வளை நாணப்
     பலநாட் பணிபதமுங் கூறிச்-சிலநாளுட்
     பொங்கரி யுண்கணாள் பூவைக்கு மாறாகப்
     பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு”
[பு. வெ. ஒழிபு. 11]

எனவரும்.

    
55. பூவைவென்றிக்குச் செய்யுள்:-

     “புரிவொடு நாவினாற் பூவை புணர்த்துப்
     பெரிய வரியவை பேசுந்-தெரிவளை
     வெள்ளெயிற்றுச் செவ்வாய் வரியுண்க ணாள்வளர்த்த
     கிள்ளை கிளந் தவைகீண் டிட்டு”
[பு. வெ. ஒழிபு. 12]

எனவரும்.

     56. குதிரைவென்றிக்குச் செய்யுள்:-

    
“ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையுங்
     கந்து மறமுங் கறங்குளைமா-முந்துற
     மேல்கொண் டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான்
     வேல்கொண்ட கண்ணாளை மீட்டு”
[பு. வெ. ஒழிபு. 13]

எனவரும். கதி-தாரை. சாரிமை-சுற்றுவரவு.

     57. தேர்வென்றிக்குச் செய்யுள்:-

    
“ஒலிமணித் திண்டே ருடையாரை வெல்லுங்
     கலி மணித் திண்டேராற் காளைக்-கலிமாப்
     பலவுடன் பூட்டிப் படர்சிறந் தைந்து
     செலவொடு மண்டிலஞ் சென்று”
[பு. வெ. ஒழிபு. 14]

எனவரும்.

     58. சூதுவென்றிக்குச் செய்யுள்:-

    
“கழகத் தியலுங் கவற்றி னிலையு
     மழகத் திருநுதலா ளாய்ந்து-புழகத்துப்
     பாய வகையாற் பணிதம் பலவென்றா
     ளாய வகையு மறிந்து”
[பு. வெ. ஒழிபு. 16]

எனவரும். பணிதம்-ஒட்டம்.

    
59. யாழ்வென்றிக்குச் செய்யுள்:-

    
“பாலை படுமலை பண்ணி யதன்கூட்டங்
     கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின்-மேலைச்