|
சுவையெலாந் தோன்ற வெழீஇயினாள் சூழ்ந்த
வவையெலா மாக்கி யணங்கு” [பு. வெ. ஒழிபு. 15]
எனவரும்.
60. பாடல்வென்றிக்குச்
செய்யுள்:-
“வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள்
வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக்-கண்டறியக்
கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையா
ழந்நரம்பு மச்சுவையு மாய்ந்து”
[பு. வெ. ஒழிபு. 18]
எனவரும்.
61. ஆடல்வென்றிக்குச்
செய்யுள்:-
“கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக்
கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு-பெய்பூப்
படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந்
தொடுகழன் மன்னன் றுடி” [பு. வெ. ஒழிபு. 17]
எனவரும்.
62. பிடிவென்றிக்குச்
செய்யுள்:-
“குவளை நெடுந்தடங்கட் கூரெயிற்றுச் செவ்வா
யவளொடு மாமையொப் பான-விவளொடு
பாணியுந் தூக்கு நடையும் பெயராமைப்
பேணிப் பெயர்ந்தாள் பிடி” [பு. வெ. ஒழிபு. 19]
எனவரும். பிடிபோலப் பெயர்ந்தாடலிற் பிடிவென்றியாயிற்று. இனி இவ்வாறன்றி,
ஆண்பாற்
கூற்று:-
நூற்பா
“காட்சி யையந் துணிவே யுட்கோள்
பயந்தோர்ப் பழிச்ச னலம்பா ராட்ட
னயப்புற் றிரங்கல் புணரா விரக்கம்
வெளிப்பட விரத்த லெனவிவ் வொன்பது
மாண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்” [பு. வெ. நூ. 14]
எனக்கூறி, இவற்றிற்கு முறையே எ - டு:-
[மருட்பா]
1. “கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா
வரும்பிவர் மென்முலை தொத்தாப்-பெரும்பணைத்தோட் |