|
பெண்டகைப் பொலிந்த பூங்கொடி
கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே”
[காட்சி. 1]
எனவும்,
[மருட்பா]
2. “தாமரைமேல் வைகிய தையல்கொ றாழ்தளிரிற்
காமருவும் வானோர்கள் காதலிகொ-றேமொழி
மையம ருண்கண் மடந்தைக
ணைய மொழியா தாழுமென் னெஞ்சே”
[ஐயம். 2]
எனவும்,
[மருட்பா]
3. “திருநுதல் வேர்வரும்புந் தேங்கோதை வாடு
மிருநிலஞ் சேவடியுந் தோயு-மரிபரந்த
போகித ழுண்கணு மிமைக்கு
மாகு மற்றிவ னகலிடத் தணங்கே” [துணிதல். 3]
[இ. வி. 490. சேயொளி உரை. மேற்.]
எனவும்,
[மருட்பா]
4. “கௌவை பெருகக் கரந்தென் மனத்திருந்து
செவ்வாய்ப் பெருந்தோட் டிருநுதலா-ளவ்வாயி
லஞ்சொன் மாரிபொய் தவியா
ணெஞ்சம் பொத்தி நிறைசுடு நெருப்பே” [உட்கோள். 4]
எனவும்,
[மருட்பா]
5. “கல்லருவி யாடிக் கருங்களிறு காரதிரு
மல்லலஞ் சாரன் மயிலன்ன-சில்வளைப்
பலவொலி கூந்தலைப் பயந்தோர்
நிலவரை மலிய நீடுவா ழியரே” [பயந்தோர்ப்பழிச்சல். 5]
எனவும்,
[மருட்பா]
6. “அம்மென் கிளவி கிளிபயில வாயிழை
கொம்மை வருமுலை கோங்கரும்ப-விம்மலை
நறும்பூஞ் சார லாங்கட்
குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே”
[நலம்பாராட்டல். 6]
எனவும், |