|
[மருட்பா]
7. “பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க்
கருமழைக்கண் வெண்முறுவற் பேதை-திருமுலை
புல்லும் பொறியி லேனுழை
நில்லா தோடுமென் னிறையி னெஞ்சே”
[நயப்புற்றிரங்கல். 7]
எனவும்,
[மருட்பா]
8. “இணரார் நறுங்கோதை யெல்வளையாள் கூட்டம்
புணராமற் பூச றரவு-முணராது
தண்டா விழுப்படர் நலியவு
முண்டா லென்னுயி ரோம்புதற் கரிதே” [புணராவிரக்கம். 8]
எனவும்,
[மருட்பா]
9. “உரவொலி மூந்நீ ருலாய்நிமிர்ந் தன்ன
கரவருங் காமங் கனற்ற-விரவெதிர
முள்ளெயி றிலங்கு மூகிழ்நகை
வெள்வளை நல்காள் விடுமென் னுயிரே”
[வெளிப்பட விரத்தல். 9]
எனவும்,
பெண்பாற் கூற்று:-
[நூற்பா]
“காண்ட னயத்த லுட்கோண் மெலிதன்
மெலிவொடு வைகல் காண்டல் வலித்தல்
பகன்முனி வுரைத்த லிரவுநீடு பருவரல்
கனவி னரற்ற னெஞ்சொடு மெலிதல்
பெண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்” [பு. வெ. நூ. 15.]
எனக்கூறி, இவற்றிற்கு முறையே எ - டு :-
[மருட்பா]
1. “கடைநின்று காம னலியக் கலங்கி
யிடைநின்ற வூரலர் தூற்றப்-புடைநின்ற
வெற்கண் டிலனந் நெடுந்தகை
தற்கண்ட னென்யான் கண்ட வாறே” [காண்டல். 1]
எனவும், |