|
[மருட்பா]
2. “கன்னவி றோளானைக் காண்டலுங் கார்க்குவளை
யன்னவென் கண்ணுக் கமுதமா-மென்னை
மலைமலிந் தன்ன மார்ப
முலைமலிந் தூழூழ் முயங்குங் காலே” [நயத்தல். 2]
எனவும்,
[மருட்பா]
3. “உள்ள முருக வொளிவளையுங் கைநில்லா
கள்ளவிழ் தாரானுங் கைக்கணையா-னெள்ளிச்
சிறுபுன் மாலை தலைவரி
னுறுதுய ரவலத் துயலோ வரிதே” [உட்கோள். 3]
எனவும்,
[மருட்பா]
4. “குரும்பை வரிமுலைமேற் கோல நெடுங்க
ணரும்பிய வெண்முத் துகுப்பக்-கரும்புடைத்தோட்
காதல்செய் காமங் கனற்ற
வேதி லாளற் கிழந்தனெ னெழிலே” [மெலிதல். 4]
எனவும்,
[மருட்பா]
5. பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்றோ
ளிறைபுனை யெல்வளை யேக-நிறைபுணையா
யாம நெடுங்கட னீந்துவேன்
காம வொள்ளெரி கனன்றகஞ் சுடுமே”
[மெலிவொடு வைகல். 5]
எனவும்,
[மருட்பா]
6. “வேட்டவை யெய்தி விழைவொழிதல் பொய்போலு
மீட்டு மிடைமணிப் பூணானைக்-காட்டென்று
மாமை பொன் நிறம் பசப்பத்
தூமலர் நெடுங்கண் டுயிறுறந் தனவே”
[காண்டல் வலித்தல் 6]
எனவும்,
[மருட்பா]
7. “தன்க ணளியவாய் நின்றேற்குத் தார்விடலை
வன்கண்ண னல்கா னெனவாடு-மென்க
|