|
ணிடரினும் பெரிதா லெவ்வம்
படரினும் பெரிதாற் பாவியிப் பகலே.”
எனவும், [பகன் முவுரைத்தல். 7]
[மருட்பா]
8. “பெண்மே னலிவு பிழையென்னாய் பேதுறீஇ
விண்மே லியங்கு மதிவீலக்கி-மண்மே
னினக்கே செய்பகை யெவன்கொ
லெனக்கே நெடியை வாழிய ரிரவே.” [இரவு நீடுபருவரல். 8]
எனவும்,
[மருட்பா]
9. “அயர்வொடு நின்றே னரும்படர் நோய்தீர
நயவரும் பள்ளிமே னல்கிக்-கயவா
நனவிடைத் தமியேன் வைகக்
கனவிடைத் தோன்றிக் கரத்தனீ கொடிதே”
[கனவினரற்றல். 9]
[மருட்பா]
“தோடவிழ்தார் யானுந் தொடர வவனுமென்
பாடகச் சீறடியின் மேற்பணிய-நாடகமா
வைகிய கங்கு றலைவரி
னுய்குவெ னுலகத் தளியேன் யானே”
[கனவினரற்றல். 10]
எனவும்,
[மருட்பா]
10. “மல்லாடு தோளா னளியவாய் மாலிருட்கட்
செல்லா மொழிக செலவென்பாய்-நில்லாய்
புனையிழை யிழந்த பூச
னினையினு நினைதியோ வாழியென் நெஞ்சே”
[நெஞ்சொடு மெலிதல். 11]
[மருட்பா]
“நல்வளை யேக நலந்தொலைவு காட்டிய
செல்லல் வலித்தேனச் செம்மன்முன்-பில்லாத
வம்ப வுரையொடு மயங்கிய
வம்பற் பெண்டிரு மறைகவெம் மலரே” [இதுவுமது 12.]
எனவும், |