பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]107

 

பெண்பாற் கூற்று:-

[நூற்பா]

 

         *“வேட்கைமுந் துறுத்தல் பின்னிலை முயறல்
         பிரிவிடை யாற்றல் வரவெதிர்ந் திருத்தல்
         வாராமைக் கழித லிரவுத்தலைச் சேற
         லில்லவை நகுதல் புலவியுட் புலம்பல்
         பொழுதுகண் டிரங்கல் பரத்தையை யேசல்
         கண்டுகண் சிவத்தல் காதலிற் களித்தல்
         கொண்டகம் புகுதல் கூட்டத்துக் குழைத
         லூடலு ணெகிழ்த லுரைகேட்டு நயத்தல்
         பாடகச் சீறடி பணிந்தபி னிரங்கல்
         பள்ளிமிசைத் தொடர்தல் செல்கென விடுத்தலென
         வொன்பதிற் றிரட்டியோ டொன்று முளப்படப்
         பெண்பாற் கூற்றுப் பெருந்திணைப் பால”   
[பு. வெ. நூ. 16]

எனக்கூறி, இவற்றிற்கு முறையே எ - டு :-
 

[நேரிசை வெண்பா]
 

     1. “எழுதெழின் மார்ப மெனக்குரித் தாகென்
        றழுதழுது வைகலு மாற்றேன்-றொழுதிரப்பல்
        வல்லிய மன்ன வயவேலோய் வாழ்கென
        வல்லியந்தார் நல்க லறம்”
          [வேட்கை முந்துறுத்தல். 1]

எனவும்,

      2. “மற்கொண்ட திண்டோண் மறவே னெடுந்தகை
         தற்கண்டு மாமைத் தகையிழந்த-வெற்காணப்
         பெய்களி யானைப் பிணரெருத்திற் கண்டியான்
         கைதொழுதேன் றான்கண் டிலன்”
      [பின்னிலை முயறல். 2]

எனவும்,

     3. “ஓடுக கோல்வளையு மூரு மலரறைக
        தோடவிழ் தாழை துறைகமழக்-கோடுடையும்
        பூங்கானற் சேர்ப்பன் புலம்புகொண் மான்மாலை
        நீங்கானென் னெஞ்சகத்து ணின்று”
       [பிரிவிடையாற்றல். 3]

எனவும்,

     4. “காம நெடுங்கட னீந்துங்காற் கைபுனைந்த
        பூமலி சேர்க்கைப் புணைவேண்டி-நீமலிந்து

   *[பன்னிரண்டாவது] பெருந்திணைப்படல மென்பர், பு. வெ.
ஆசிரியர்.