|
செல்லாய் சிலம்பன் வருவதற்குச் சிந்தியா
யெல்லாக நெஞ்ச மெதிர்” [வரவெதிர்ந்திருத்தல். 4]
எனவும்,
5. “நுடங்கருவி யார்த்திழியு நோக்கருஞ் சார
லிடங்கழி மான்மாலை யெல்லைத்-தடம்பெருங்கட்
டாரார மார்பன் றமியே னுயிர் தளர
வாரான்கொ லாடும் வலம்” [வாராமைக் கழிதல். 5]
எனவும்,
6. “பணையா வறைமுழங்கும் பாயருவி நாடன்
பிணையார மார்பம் பிணையத்-துணையாய்க்
கழிகாம முய்ப்பக் கனையிருட்கட் செல்கேன்
வழிகாண மின்னுக வான்” [இரவுத்தலைச் சேறல். 6]
எனவும்,
7. “முற்றா முலையார் முயங்க விதழ்குழைந்த
நற்றா ரகல நகைதரலி-னற்றார்
கலவே மெனநேர்ந்துங் காஞ்சிநல் லூர
புலவேம் பொறுத்த லரிது” [இல்லவை நகுதல். 7]
எனவும்,
8. “ஓங்கிய வேலான் பணியவு மொள்ளிழை
தாங்காள் வரைமார்பிற் றார்பரிந்-தாங்கே
யடும்படர் மூழ்கி யமைமென்றோள் வாட
நெடும்பெருங்க ணீந்தின நீர்”
[புலவியுட் புலம்பல். 8]
எனவும்,
9. “இறையே யிறந்தன வெல்வளை யுண்க
ணுறையே பொழிதலு மோவா-நிறையைப்
பருகாப் பகல்கரந்த பையுள்கூர் மாலை
யுருகா வுயங்கு முயிர்” [பொழுது கண்டிரங்கல். 9]
எனவும்,
10. “யாமுயங்கு மென்முலையால் யாணர் வயலூரன்
றேமுயங்கு பைந்தார் திரைமுயங்க-யாமுயங்க
வெவ்வையர் சேரி யிரவு மிமைபொருந்தாக்
கௌவை கருதிற் கடை” [பரத்தையையேசல். 10]
எனவும்,
11. “கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பி
னாடிய சாந்தி னணிதொடர்ந்து-வாடிய |