|
தார்க்குவளை கண்டு தரியா விவண்முகத்த
கார்க்குவளை காலுங் கனல்” [கண்டுகண்சிவத்தல். 11]
எனவும்,
12. “காதல் பெருகிக் களிசெய்ய வக்களியாற்
கோதையுந் தாரு மிடைகுழைய-மாதர்
கலந்தாள் கலந்து கடைக்கண்ணாற் கங்குல்
புலந்தாள் புலரியம் போது” [காதலிற் களித்தல். 12]
எனவும்,
13. “கண்டுகளித்துக் கயலுண்க ணீர்மல்கக்
கொண்டகம் புக்காள் கொடியன்னாள்-வண்டினங்
காலையாழ் செய்யுங் கருவரை நாடனை
மாலையான் மார்பம் பிணித்து” [கொண்டகம் புகுதல். 13]
எனவும்,
14. “மயங்கி மகிழ்பெருக மால்வரை மார்பிற்
றயங்கு புனலூரன் றண்டார்-முயங்கியும்
பேதை புலம்பப் பிரிதியோ நீயென்னுங்
கோதைசூழ் கொம்பிற் குழைந்து”
[கூட்டத்துக் குழைதல். 14]
எனவும்,
15. “தெரிவின்றி யூடத் தெரிந்துநங் கேள்வர்
பிரிவின்றி நல்கினும் பேணாய்-திரிவின்றித்
துஞ்சே மெனமொழிதி தூங்கிருண் மான்மாலை
நெஞ்சே யுடைய நிறை” [ஊடலுணெகிழ்தல். 15]
எனவும்,
16. “ஆழ விடுமோ வலரொடு வைகினுந்
தாழ்குர லேனற் றலைக்கொண்ட-நூழில்
விரையாற் கமழும் விறன்மலை நாட
னுரையாற் றளிர்க்கு முயிர்” [உரைகேட்டு நயத்தல். 16]
எனவும்,
17. “அணிவரும் பூஞ்சிலம் பார்க்கு மடிமேன்
மணிவரை மார்பன் மயங்கிப்-பணியவும்
வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை
நிற்கென்றி வாழியர் நீ”
[பாடகச்சீறடி பணிந்தபினிரங்கல். 17]
எனவும், |