பக்கம் எண் :

110 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     18. “யானை தொடருங் கொடிபோல யானுன்னைத்
        தானை தொடரவும் போதியோ-மானை
        மயக்கரிய வுண்கண் மடந்தைதோ ளுள்ளி
        யியக்கருஞ் சோலை யிரா”
       [பள்ளிமிசைத் தொடர்தல். 18]

எனவும்,

     19. “விலங்குந ரீங்கில்லை வென்வேலோய் சென்றீ
        யிலங்கிழை யெவ்வ நலியக்-கலங்கிக்
        குறியுள் வருந்தாமைக் குன்றுசூழ் சோலை
        நெறியுள் விரிக நிலா”
               [செல்கென விடுத்தல். 19]

எனவும்,

                  [இருபாற் பெருந்திணை]

                         [நூற்பா]

        “சீர்செல வழுங்கல் செழுமட லூர்த
        றூதிடை யாட றுயரவற் குரைத்தல்
        கண்டுகை சோர்தல் பருவ மயங்க
        லாண்பாற் கிளவி பெண்பாற் கிளவி
        தேங்கமழ் கூந்தற் றெரிவை வெறியாட்
        டரிவைக் கவடுணை பாண்வர வுரைத்தல்
        பரிபுரச் சீறடிப் பரத்தை கூறல்
        விறலி கேட்பத் தோழி கூறல்
        வெள்வளை விறலி தோழிக்கு விளம்பல்
        பரத்தை வாயில் பாங்கிகண் டுரைத்தல்
        பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்

        குற்றிசை யேனைக் குறுங்கலி யுளப்பட
        வொத்த பண்பி னொன்றுதலை யிட்ட
        வீரெண் கிளவியும் பெருந்திணைப் பால”
      [பு. வெ. நூ. 17]

எனக்கூறி, இவற்றிற்கு முறையே எ - டு:-

                    [நேரிசை வெண்பா]


      1. “நடுங்கி நறுநுதலா ணன்னலம்பீர் பூப்ப
        வொடுங்கி யுயங்க லொழியக்-கடுங்கணை
        வில்லே ருழவர் விடரோங்கு மாமலைச்
        செல்லே மொழிக செலவு
                   [செலவழுங்கல். 1]

எனவும்,