பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]111


    
2. “இன்றிப் படரோ டியானுழப்ப வைங்கணையான்
        வென்றிப் பதாகை யெடுத்தானா-மன்றிற்
        றனிமடமா னோக்கி தகைநலம்பா ராட்டிக்
        குனிமடன்மாப் பண்ணிமேல் கொண்டு
         [மடலூர்தல். 2]

எனவும்,

     3. “வள்வாய்ந்து பண்ணுக திண்டேர் வடிக்கண்ணா
        ளொள்வாள்போன் மாலை யுயல்வேண்டுங்-கள்வாய
        தாதொடு வண்டிமிருந் தாம வரைமார்ப
        தூதொடு வந்தேன் றொழ”
                [தூதிடையாடல். 3]

எனவும்,

    
4. “உள்ளத் தவலம் பெருக வொளிவேலோ
        யெள்ளத் துணிந்த விருண்மாலை-வெள்ளத்துள்
        தண்டா ரகலந் தழூஉப்புணையா நீநல்கி
        னுண்டாமென் றோழிக் குயிர்”
         [துயரவற் குரைத்தல். 4]
 
எனவும்,

    
5. “ஆம்ப னுடங்கு மணிவளையு மேகின
        கூம்பன் மறந்த கொழுங்கயற்கண்-காம்பி
        னெழில்வாய்ந்த தோளி யெவனாங்கொல் கானற்
        பொழிலெல்லா மீயும் புலம்பு”
         [கண்டுகை சோர்தல். 5]

எனவும்,

    
6. “பெரும்பணை மென்றோள் பிரிந்தாரெம் முள்ளி

        வரும்பருவ மன்றுகொ லாங்கொல்-சுரும்பிமிரும்
        பூமலி கொன்றை புறவெலாம் பொன்மலரு
        மாமயிலு மாலு மலை”
                     [பருவமயங்கல். 6]
 

எனவும்,

 

        “பொறிமயி லாலின பொங்க ரெழிலி
        சிறுதுவலை சிந்தின சிந்த-நறிய
        பவர்முல்லை தோன்றி பரியாம லீன்ற

        வவர்வருங் காலமீ தன்று”                     [இதுவுமது. 7]

எனவும்,
 

     7. “கயற்கூடு வாண்முகத்தாட் கண்ணிய நெஞ்ச
       முயற்கூடு முன்னதாக் காணி-னுயற்கூடுங்