பக்கம் எண் :

112 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


        காணா மரபிற் கடும்பகலுங் கங்குலு
        நாணாளு மேயா நகை”
                  [ஆண்பாற்கிளவி. 8]

எனவும்,
     
8. “வானத் தியலு மதியகத்து வைகலுங்
        கானத் தியலு முயல்காணுந்-தானத்தி
        னொள்வளை யோடவு முள்ளான் மறைந்துறையுங்
        கள்வனைக் காணாதிவ் வூர்”
            [பெண்பாற் கிளவி. 9]

எனவும்,

    
9. “வெய்ய நெடிதுயிரா வெற்ப னளிநினையா
        வைய நனிநீங்க வாடினாண்-மைய
        லயன்மனைப் பெண்டிரோ டன்னைசொ லஞ்சி
        வியன்மனையு ளாடும் வெறி”
                [வெறியாட்டு. 10]

எனவும்,

    
10. “அஞ்சொற் பெரும்பணைத்தோ ளாயிழையாய் தாநொடியும்
        வஞ்சந் தெரியா மருண்மாலை-யெஞ்சேரிப்
        பண்ணியல் யாழொடு பாணனார் வந்தாரா
        லெண்ணிய தென்கொலோ வீங்கு”
      [பாண்வரவுரைத்தல். 11]

எனவும்,

     
11. “பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வய லூர
         னிலவுரைக்கும் பூணவர் சேரிச்-செலவுரைத்து
         வெங்கட் களியால் விறலி விழாக்கொள்ள
         லெங்கட் கவன்றா ரெளிது”
               [பரத்தைகூறல். 12]

எனவும்,

     12. “அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம்
        பெருந்தோள் விறலி பிணங்கல்-சுரும்போ
        டதிரும் புனலூரற் காரமிர்த மன்றோ
        முதிரு முலையார் முயக்கு”
      [விறலிகேட்பத் தோழிகூறல். 13]

எனவும்,

    
13. “உளைத்தவர் கூறு முரையெல்லா நிற்க
        முளைத்த முறுவலர்க் கெல்லாம்-விளைத்த
        பழங்க ளனைத்தாய்ப் படுகளி செய்யு
        முழங்கும் புனலூரன் மூப்பு”
                                      [விறலி தோழிக்கு விளம்பல். 14]

எனவும்,