பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]113


     14. “மாணலங் கொள்ளு மகிழ்நன் றணக்குமேற்
        பேணலம் பெண்மை யொழிகென்பார்-காணக்
        கலவ மயிலன்ன காரிகையார் சேரி
        வலவ னெடுந்தேர் வரும்”
                           [பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல். 15]

எனவும்,

     1
5. “தண்டா ரணியவாந் தையலார் சேரியுள்
        வண்டார் வயலூரன் வைகினமை-யுண்டா
        லறியே னடியுறை யாயிழையாற் பெற்றேன்
        சிறியேன் பெரிய சிறப்பு
                            [பிறர் மனைத்துயின்றமை விறலி கூறல். 16]

எனவும்,

    
16. “கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கை யாளை
        மரிய கழிகேண்மை மைந்த-தெரியின்
        விளிந்தாங் கொழியினும் விட்டகலார் தம்மைத்
        தெளிந்தாரிற் றீர்வது தீது”
[குற்றிசை. 17]

எனவும்,

    
17. “பண்ணவாந் தீஞ்சொற் பவளத் துவர்ச்செவ்வாய்ப்
        பெண்ணவாம் பேரல்குற் பெய்வளை-கண்ணவா
        நன்னலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ
        தொன்னல முண்டார் தொடர்பு”
[குறுங்கலி. 18]

எனவும் எடுத்தோதி இவற்றை அகத்திணைப்புறமென்று கொண்டு
பொதுவியலுட்கூறுவாரும் உளர். அங்ஙனம் ஆகாமை மேற்கூறிப் போந்த
வெட்சி, வஞ்சியென்னும் நூற்பாவுரையானுணர்க.

                        
இரண்டாவது
                 புறத்திணையியல் முற்றிற்று
.

                                                                ___