பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]13


2. படையியங்கரவத்திற்குச் செய்யுள்:-

   
“காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட
    வேலார் வெருவந்த தோற்றத்தார்-காலன்
    கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே
    யுளர்ந்தார் நிரைப்பெயர்வு முண்டு” [பு. வெ. கரந். 2]

எனவரும்.

3. பறவாப்புட்டெரிதற்குச் செய்யுள்:-

  “வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த
   பைந்தொடியார் கூறும் பறவாப்பு-ளுய்ந்த
   நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை
   வரையளவைத் தாவதா மண்” [தொல். புறத். 3. நச்]

எனவரும். பறவாப்புள், வெளிப்படை.

4. நடைவயிற் சேறற்குச் செய்யுள்:-

  “சங்குங் கருங்கோடுந் தாழ்பீலிப் பல்லியமு
   மெங்கும் பறையோ டெழுந்தார்ப்ப-வெங்க
   லழற்சுரந் தாம்படர்ந்தா ரான்சுவட்டின் *மீதே
   நிழற்கதிர்வேன் மின்ன நிரைத்து” [பு. வெ. கரந். 3]

எனவரும்.

5. நன்குணருசாவிற்குச் செய்யுள்:-

  “நெடுநிலை யாயத்து நிரைசுவ டொற்றிப்
   படுமணி யாயம் பகர்ந்தோய்-நெடிது
   மனக்குரிய காதல் வயவேந்தனென்று
   நினக்குரிய வாக நிரை” [தொல். புறத். 3. நச்.]

எனவரும்.

6. புறத்திறைக்குச் செய்யுள்:-

       நேரிசை யாசிரியப்பா

   “இருநில மருங்கி னெப்பிறப் பாயினு
    மருவின் மாலையோ வினிதே யிரவி
    னாகோண் மள்ளரு மருள்வரக் கானத்து
    நாம்புறத் திறுத்தன மாகத் தாந்தாங்
    கன்குரல் கேட்டன போல
    நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே” [தகடூர். புற. 1251]

எனவரும்.
(பா - ம்.) * மேலே