|
7. திறப்படப்பொருதற்குச் செய்யுள்:-
“புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார்
வலிச்சினமு மானமுந் தேசு-மொலிக்கு
மருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச்
செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து” [பு. வெ. கரந். 4]
எனவரும்.
8. புண்ணொடு வருதற்குச் செய்யுள்:-
“வெங்குருதி மல்க விழுப்புண் *ணுகுதோறு
மிங்குலிகஞ் சோரும் வரையேய்க்கும்-பைங்கண்
ணினம்போக்கி நின்றா ரிகல்வாட்டி வேந்தன்
மனம்போல வந்த மகன்” [பு. வெ. கரந். 5]
எனவரும்.
9. போர்க்களத் தொழிதற்குச் செய்யுள்:-
“உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட
நிரைப்பி னெடுந்தகை சென்றான்-புரைப்பின்
றுளப்பட்ட வாயெல்லா மொள்வாள் கவரக்
களப்பட்டான் றோன்றான் கரந்து” [பு. வெ. கரந். 6]
எனவரும்.
10. ஆளெறி பிள்ளைக்குச் செய்யுள்:-
“பிள்ளை கடுப்பப் பிணப்பிறங்க வாளெறிந்து
கொள்ளைகொ ளாயந் தலைக்கொண்டா-ரெள்ளிப்
பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளா
னொருதனியே நின்றா னுளன்” [பு. வெ. கரந். 7]
எனவரும். ஆளெறிபிள்ளை, ஆளை எறியும் பிள்ளைத்தன்மையன்.
11. பிள்ளைத் தெளிவுக்குச் செய்யுள்:-
“மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன்
பூவா ளுறைகழியாப் போர்க்களத்து-ளோவான்
றுடியிரட்டி விம்மத் தொடுகழலார் முன்னின்
றடியிரட்டித் திட்டாடு மாட்டு” [பு. வெ. கரந். 8]
எனவரும். இது கவந்தம் ஆடியது.
(பா - ம்.) * ணுகுதொறூஉ
செருவிடை வீழ்தலுமிது - புறநா. 271, 272. |