|
12. பிள்ளையாட்டிற்குச் செய்யுள்:-
“மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து
கூட்டிய வெஃகங் குடர்மாலை-சூட்டியபின்
மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேறிரிய விம்முந் துடி” [பு. வெ. கரந். 9]
எனவரும்.
13. கையறுநிலைக்குச் செய்யுள்:-
“நாப்புலவர் சொன்மாலை நண்ணார் படையுழக்கித்
தாப்புலி யொப்பத் தலைக்கொண்டான்-பூப்புனையு
நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்
கற்கொலோ சோர்ந்திலவெங் கண்” [பு. வெ. கரந். 10]
எனவரும்.
14. நெடுமொழிகூறற்குச் செய்யுள்:- *
“ஆளமர் வெள்ளம் பெருகி னதுவிலங்கி
வாளொடு வைகுவேன் யானாக-நாளுங்
கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோ யீயப்
பிழிமது வுண்பார் பிறர்” [பு. வெ. கரந். 11]
எனவரும்.
15. பிள்ளைப்பெயர்ச்சிக்குச் செய்யுள்:- 2
“பிணங்கமருட் பிள்ளை பெயர்ப்பப் பெயரா
தணங்கஞர்செய் தாளெறித னோக்கி-வணங்காச்
சிலையளித்த தோளான் சினவிடலைக் கன்றே
தலையளித்தான் றண்ணடையுந் தந்து” [பு. வெ. கரந். 12]
எனவரும். தண்ணடை - மருதநிலம். பிள்ளை - காரிப்பிள்ளை.
16. வேத்தியன் மலிபிற்குச்
செய்யுள்:-
“அங்கையு ணெல்லி யதன்பய மாதலாற்
கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த்-தங்கிச்
செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வா
யுயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்” [பு. வெ. கரந். 13]
எனவரும்.
* புறநா. 298.
இது தன்மேம்பாட்டுரையணியுமாகும். [இ. வி. 666]
புறநா. 259 புறநா. 286, 291
|