பக்கம் எண் :

16 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     17. குடிநிலைக்குச்
செய்யுள்:- *

      “பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
      வையகம் போர்த்த வயங்கொலிநீர்- கையகலக்
      கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
      முற்றோன்றி மூத்த குடி” [பு. வெ. கரந். 14]
எனவரும்.
 

              18. ஆபெயர்த்துத் தருதற்குச் செய்யுள்:-

     “கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின்
     மிடல்பெரி தெய்தின மாதோ-தொடலைக்
     கரந்தை மறவர்க் 1 கருதார் குழாஅந்
     துரந்து நிரைமீட்ட தோள்”
                    [தொல். புறத். 3. நச். &  பெரும்பொருள் விளக்கம்]
எனவரும்.

    
 19. அருஞ்சமர்விலக்கற்குச் செய்யுள்:-

                  நேரிசை யாசிரியப்பா

          2 “ஆவூ ரெறிந்து நிரையொடுபெ யர்ந்த
          வெட்சி மறவர் வீழவு முட்காது
          கயிறியல் பாவை போல வயிறிரித்
          துழைக்குரற் குணர்ந்த வளைப்புலி போல
          முற்படு பூசல் கேட்டனர் பிற்பட
          நிணமிசை யிழுக்காது தமர்பிண மிடறி
          நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண்
          மாக்கட னெருப்புப் போல நோக்குபு
          வெஞ்சிலை விடலை வீழ்ந்தன
          னஞ்சுதக் கன்றாற் செஞ்சோற்று நிலையே”
                                   [தொல். பொருள். புறத். 3. நச்.]
எனவரும்.

    
  20. நலிவின்றுய்த்தற்குச் செய்யுள்:-

    
 “கல்கெழு சீறூர்க் கடைகாண் விருப்பினான்
      மெல்ல நடவா விரையுநிரை யொல்லெனத்
      தெள்ளறற் கானியாற்றுத் தீநீர் பருகவு
      மள்ளர் நடவாஅ வகை”
                       [பெரும்பொருள் விளக்கம். தொல். புறத். 3 நச்.]
எனவரும்.

* புறநா. 290 (பா-ம்.) 1 கருதாதா ருள்ளத் 2 இரவூ