பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]17


     21. நண்ணுவழித்தோற்றத்திற்குச் செய்யுள்:-


    
“காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையான்
     மீட்ட மகனை வினவுமு-னோட்டந்து
     தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு
     மென்னெதிர்ப் பட்டாயோ வென்று”
                      [பெரும்பொருள் விளக்கம். தொல். புறத். 3. நச்.]
எனவரும்.

    
22. நிறைத்தற்குச் செய்யுள்:-

    
“கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத்
     தொழுவிடை யாயந் தொகுமி-னெழுவொழித்தாற்
     போமே யிவற்றைநீர் போற்றுமின் புல்லொடுநீர்
     தாமேய் புலம்போலத் தந்து”
                      [பெரும்பொருள் விளக்கம். தொல். புறத். 3. நச்.]
எனவரும்.

    
23. பாதீட்டுக்குச் செய்யுள்:-

    
“யாமே பகுத்திடல் வேண்டா வினநிரை
     தாமே தமரை யறிந்தனகொ-லேமுற
     வன்றீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச்
     சென்றீண்டு மாங்கவர்பாற் சென்று”
                      [பெரும்பொருள் விளக்கம். தொல். புறத். 3. நச்.]
எனவரும்.

    
24. உண்டாட்டுக்குச் செய்யுள்:-
 
                     
நேரிசை யாசிரியப்பா

      “பகைவர் கொண்ட படுமணி யாய
      மீட்டிவ ணடைந்த வாட்டிறற் குரிசின்
      முழவுத்துயின் மறந்த மூதூ ராங்கண்
      விழவுத்தலைக் கொண்ட விளையாட் டாயத்
      தூன்சுடு கொழும்புகைக் கருங்கொடி யும்பர்
      மீன்சுடு புகையின் விசும்புவாய்த் தன்றே
      கைவல் கம்மியர் பல்கூட் டாரமொடு
      நெய்பிழி நறுவிரை நிலம்பரந் தன்றே
      காவிற் காவில் கணங்கொள் வண்டெனப்
      பூவிலை மகளிர் புலம்படர்ந் தனரே
      சந்தியுஞ் சதுக்கமும் பந்தர் போகிய

   * புறநா. 257, 258, 262, 269, 297.