பக்கம் எண் :

20 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

நீடவுங் குறுகவு நிவப்பவுந் தூக்கிப்
பாடிய பாணர்க்குப் பயந்தகொடை வஞ்சியு
மடுத்த வேந்தற்கு வழங்குவ வழங்கிக்
குடிக்கருள் சுரந்த குறுவஞ்சி யானு
மட்டூர் தெரியன் மறங்கெழு வேந்தன்
கட்டூர் வகைமை கட்டுரைத்த பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
வொருவன் றாங்கிய வொருதனி நிலையு
மழியுநர் புறக்கொடை யயில்வா ளோச்சாக்
கழிதறு கண்மைத் தழிஞ்சியு மதாஅன்று
மதிக்குடை வேந்தன் மாற்றலர் வணங்கவும்
பதிப்பெயர் கில்லாப் பாசறை வஞ்சியு
முன்னடை யாதார் வளங்கெழு நாட்டைப்
பின்னுமெரி யூட்டிய பெருவஞ்சி யானு
மிறையவன் வயவர்க் கிருஞ்சோற் றமலை
பெறுமுறை யுதவிய பெருஞ்சோற்று நிலையும்
வெளிகெடப் பகைமுனை யிறுத்த வேந்தன்
நளிவிறன் மிகுந்த நல்லிசை வஞ்சியு
மிறுத்தபி னாடழி பிரங்கிமறுத் துரைத்த
பக்கமு மெனமுறை தொக்க வையைந்து
நல்லிசைப் புலவர் நாடினர் தெளிந்து
சொல்லிய வஞ்சித் துறையெனப் படுமே.
 

      இது முற்கூறிய வஞ்சித்திணை இத்துணைத்துறையுடைத்
தென்கின்றது.

      (இ - ள்.) வாடாவஞ்சிமலைதல் முதலாக இறுத்தபின்
நாட்டழிபிரங்கி மறுத்துரைத்த பக்கம் ஈறாக முறையே தொக்க
இருபத்தைந்தும் நல்லிசைப் புலவர் ஆராய்ந்து தெளிந்து
சொல்லிய வஞ்சித்துறையென்று கூறப்படும், எ - று.

    
1. வாடாவஞ்சிமலைதற்குச் செய்யுள்:-

    "செங்கண் மழவிடையிற் றண்டிச் சிலைமறவர்
    வெங்கண் மகிழ்ந்து விழவயர-வங்குழைய

இ. வி.-22