பக்கம் எண் :

28 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

வாஅண் மறவர் வணங்கார் வைகிய
நீஇண் மதிலி னிலையெடுத் தியம்பலும்
வென்றியொடு நெடும்புகழ் விளைக்குமென்றிறைவன்
றொன்று வந்த தோன்மலி புரைத்தலுங்
கருதார் காக்குங் கடிமதிற் குமரிமே
லொருதா னாகி யுடன்றகுற் றுழிஞையும்
வளையின மொலிப்ப வயிர்கிளர்ந் தார்ப்ப
மிளைபிறக் கொழிய விரைந்த பக்கமொடு
பாடருந் தோற்படை யீடுசான் மறவ
ராடலோ டடைந்த பக்கமு மதாஅன்று
விண்டோ யருமிளை கடந்துகுண் டகழிப்
புறத்துவந் திறுத்தலும் போர்க்கருங் கிடங்கிற்
பற்றல ரொடுபொரூஉம் பாசி நிலையுந்
தொடுகழன் மறவர் துன்னித் துன்னா
ரிடுசூட் டிஞ்சியி னேணி சார்த்தலு
மாடுத லொல்லா வரண்கா வலவ
ரீடற வேணியி னிவரெயிற் பாசியும்
வேஎய் பிணங்கிய மிளைசூ ழரணம்
பாஅய் புள்ளிற் பாய்ந்தமூ துழிஞையு
முரணகத் தவிய முதுசினஞ் சிறந்தோ
ரரணகத் தோரை யடலகத் துழிஞையு
மருமுர ணதனா லமர்வர வறியாச்
செருமதி லோர்சிறப் புரைத்த பக்கமு
மகத்தோன் காலை யதிர்முர சியம்பப்
புறத்தோன் வஞ்சினம் புகன்முற்று முதிர்வு
மேவலர்க் கடந்து வெலற்கருங் காவலொடு

யானைகைக் கொண்ட யானைகைக் கோளு
முற்றுவிட் டகல மற்றொரு வேந்தன்
வெற்றியம் படைவரூஉம் வேற்றுப்படை வரவு

மெண்ணா ராரெயில் கழுதை யேரி
னுண்ணா வரகுகொள் ளுழுதுவித் திடுதலும்
புண்ணிய நீரிற் புரையோ ரேத்த